ஆதியாகமம் 24:12 - Compare All Versions

ஆதியாகமம் 24:12 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அப்பொழுது அவன், “யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, இன்று எனக்கு வெற்றியைத் தந்து, என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும்.

ஆதியாகமம் 24:12 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

“என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற யெகோவாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் நிறைவேறச்செய்து, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.

ஆதியாகமம் 24:12 TAERV (பரிசுத்த பைபிள்)

அவன், “என் எஜமானனின் தேவனாகிய கர்த்தாவே இன்று அவரது குமாரனுக்குப் பெண் தேட உதவி செய்யும். என் எஜமானரான ஆபிரகாம் மீது கருணை காட்டும்.

ஆதியாகமம் 24:12 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.