எபேசியர் 4:9 - Compare All Versions

எபேசியர் 4:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“அவர் மேலெழுந்து போனார்” என்பதன் அர்த்தம் என்ன? அவர் அதற்குமுன்னதாக பூமியின் தாழ்வான இடங்களுக்கு இறங்கினார் என்று அர்த்தமாகிறது அல்லவா?

எபேசியர் 4:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா?

எபேசியர் 4:9 TAERV (பரிசுத்த பைபிள்)

அவர் மேலே சென்றார் என்று சொல்லும்போது அதன் பொருள் என்ன? முதலில் அவர் பூமிக்குக் கீழிறங்கி வந்தார் என்பது பொருளாகிறது.

எபேசியர் 4:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?