அப்போஸ்தலர் 10:3 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
அப்போஸ்தலர் 10:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு
அப்போஸ்தலர் 10:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிற்பகலில் ஏறக்குறைய மூன்று மணியளவில் தேவனுடைய தூதன் அவனிடத்தில் வந்து, கொர்நேலியுவே! என்று அழைத்ததை தெளிவாய் தரிசனம் கண்டு
அப்போஸ்தலர் 10:3 TAERV (பரிசுத்த பைபிள்)
ஒருநாள் மதியத்திற்குப்பின் மூன்று மணியளவில் கொர்நேலியு ஒரு காட்சியைக் கண்டான். அவன் தெளிவாக அதைக் கண்டான். அக்காட்சியில் தேவனிடமிருந்து ஒரு தூதன் அவனிடம் வந்து “கொர்நேலியுவே!” என்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 10 TAERVஅப்போஸ்தலர் 10:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஒரு நாள் பிற்பகல் மூன்றுமணியளவில், அவன் ஒரு தரிசனம் கண்டான். அவன் அதிலே இறைத்தூதன் ஒருவனை மிகத் தெளிவாகக் கண்டான். அந்தத் தூதன், “கொர்நேலியு!” என்றான்.
பகிர்
அப்போஸ்தலர் 10 TCV