2 இராஜாக்கள் 8:26 - Compare All Versions
2 இராஜாக்கள் 8:26 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அத்தாலியாள்.
2 இராஜாக்கள் 8:26 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே ஒரு வருடம் எருசலேமில் அரசாட்சி செய்தான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் மகளான அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள்.
2 இராஜாக்கள் 8:26 TAERV (பரிசுத்த பைபிள்)
அகசியாவிற்கு அவன் ஆளவந்தபோது 22 வயது. ஓராண்டு எருசலேமில் ஆண்டான். அவன் தாயின் பெயர் அத்தாலியாள். அவள் இஸ்ரவேலின் ஓம்ரி ராஜாவின் குமாரத்தி.
பகிர்
2 இராஜாக்கள் 8 TAERV2 இராஜாக்கள் 8:26 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அகசியா அரசனானபோது இருபத்தி இரண்டு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஒரு வருடம் ஆட்சிசெய்தான். இஸ்ரயேலின் அரசன் உம்ரியின் பேத்தியான அத்தாலியாள் என்பவளே இவனது தாய்.
பகிர்
2 இராஜாக்கள் 8 TCV