2 இராஜாக்கள் 12:14 - Compare All Versions

2 இராஜாக்கள் 12:14 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இப்பணம் யெகோவாவினுடைய ஆலயத்தின் திருத்த வேலைகளைச் செய்த வேலையாட்களுக்கே கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை ஆலயத்தின் திருத்த வேலைகளுக்கே உபயோகித்தனர்.

2 இராஜாக்கள் 12:14 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்காக வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.

2 இராஜாக்கள் 12:13-14 TAERV (பரிசுத்த பைபிள்)

ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காகப் பணத்தைக் கொடுத்தனர். வெள்ளிக் கிண்ணங்கள், இசைக்கருவிகள், எக்காளங்கள், பொன் பாத்திரங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்ய ஆசாரியர்களால் அப்பணத்தை உபயோகிக்க முடியாமல் போனது. வேலைக்காரர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே இப்பணம் உபயோகமானது. அந்த வேலைக்காரர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்தார்கள்.

2 இராஜாக்கள் 12:14 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.