1 இராஜாக்கள் 7:26 - Compare All Versions

1 இராஜாக்கள் 7:26 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

தொட்டியின் கனம் நான்கு விரல் அளவு தடிப்புடையது. அதன் விளிம்பு ஒரு கிண்ணத்தின் விளிம்பு போலவும், விரிந்த லில்லி பூவைப்போலவும் இருந்தது. அது கிட்டத்தட்ட 40,000 லிட்டர் தண்ணீர் கொள்ளத்தக்கதாக இருந்தது.

1 இராஜாக்கள் 7:26 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அதின் கனம் நான்கு விரலளவும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிமலர் போலவும் இருந்தது; அது 2,000 குடம் தண்ணீர் பிடிக்கும்.

1 இராஜாக்கள் 7:26 TAERV (பரிசுத்த பைபிள்)

தொட்டியின் பக்கங்கள் 4 அங்குல கனம்கொண்டவை. தொட்டியின் விளிம்பானது கிண்ணத்தின் விளிம்பைப் போலவும், பூவின் இதழ்களைப் போலவும் இருந்தன. இதன் கொள்ளளவு 11,000 காலன்களாகும்.

1 இராஜாக்கள் 7:26 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அதின் கனம் நாலுவிரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம் போலும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.