பின்பு கர்த்தர் என்னிடம், “உன் மனைவி வேறொருவனால் அன்பு செலுத்தப்பட்டவளாகவும், ஒரு விலைமாதுவாகவும் இருந்தாலும், நீ உன் மனைவியிடம் மீண்டும் போய், அவளிடத்தில் அன்பு செலுத்து. வேறு தெய்வங்களின் பக்கம் திரும்பி, புனிதமான திராட்சைப்பழ அடைகளை விரும்புகிற இஸ்ரயேல் மக்களில் கர்த்தர் அன்பாயிருக்கின்றது போல, நீயும் அவளில் அன்பாயிரு” என்றார்.