ஆதியாகமம் 6இலிருந்து பிரபலமான வேதாகம வசனங்கள்

பூமியில் மனிதர்கள் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் பெண்பிள்ளைகள் பிறந்தபோது, இறைமக்கள் இந்தப் பெண் பிள்ளைகளை அழகுள்ளவர்களாகக் கண்டு, அவர்களுக்குள் தாம் விரும்பியவர்களை அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். அப்போது கர்த்தர், “என்னுடைய ஆவி என்றைக்கும் மனிதரோடு போராடுவதில்லை, அவன் அழிவுக்குரிய மாம்சமானவன்; அவனது நாட்கள் நூற்று இருபது வருடங்கள்” என்றார். அந்த நாட்களிலும், அதற்குப் பின்னரும் நெபிலிம் என அழைக்கப்பட்டவர்கள் பூமியில் இருந்தார்கள்; இறைமக்கள் மனுக்குலப் பெண்களுடன் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்றபோது, முற்காலத்தில் புகழ்பெற்ற மனிதர்களாக இருந்த பலசாலிகள் இவர்களே.