‘நீங்கள் யோசேப்பிடம், “உன் சகோதரர்களின் பாவங்களையும், அவர்கள் உன்னைக் கொடுமையாக நடத்தியதன் மூலம் உனக்குச் செய்த அநியாயங்களையும் நீ அவர்களுக்கு மன்னிப்பாயாக” என்று கூறுங்கள்’ என்று சொன்னார். அதனால் உமது தந்தையின் இறைவனின் அடியவராகிய நாங்கள் செய்த பாவங்களை, இப்போது எங்களுக்குத் தயவுடன் மன்னித்திடுக” என்று செய்தி அனுப்பினார்கள். அச்செய்தி யோசேப்புக்குக் கிடைத்ததும் அவன் அழுதான்.