1
ஆதியாகமம் 35:11-12
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
மேலும் இறைவன், “சர்வ வல்லமை கொண்ட இறைவன் நானே; நீ இனவிருத்தியடைந்து பெருகுவாயாக. உன்னிலிருந்து ஒரு இனமும், பற்பல இனங்களும் தோன்றும்; உன் சந்ததியில் அரசர்களும் தோன்றுவார்கள். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் நான் கொடுத்த நாட்டை உனக்கும் கொடுக்கின்றேன்; உனக்குப் பின்னர் உன் சந்ததிக்கும் இந்த நாட்டைக் கொடுப்பேன்” என்றார்.
ஒப்பீடு
ஆதியாகமம் 35:11-12 ஆராயுங்கள்
2
ஆதியாகமம் 35:3
வாருங்கள், அதன் பின்னர் நாம் எல்லோரும் எழுந்து உடனே பெத்தேலுக்குப் போவோம். எனக்கு பேரிடர் ஏற்பட்ட நாட்களில் என் மன்றாடுதலைக் கேட்டு, நான் போன இடமெல்லாம் என்னுடன் இருந்த இறைவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டுவேன்” என்றான்.
ஆதியாகமம் 35:3 ஆராயுங்கள்
3
ஆதியாகமம் 35:10
இறைவன் அவனிடம், “உன் பெயர் யாக்கோபு, ஆனால் இனிமேல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படாமல் இஸ்ரயேல் என்றே அழைக்கப்படுவாய்” என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரயேல் எனப் பெயர் சூட்டினார்.
ஆதியாகமம் 35:10 ஆராயுங்கள்
4
ஆதியாகமம் 35:2
எனவே யாக்கோபு தன் குடும்பத்தார் மற்றும் தன்னோடிருந்த அனைவரிடமும், “நீங்கள் வைத்திருக்கும் அந்நிய தெய்வங்களை விலக்கிவிடுங்கள்; உங்களைத் தூய்மைப்படுத்தி, உங்கள் ஆடைகளை மாற்றுங்கள்.
ஆதியாகமம் 35:2 ஆராயுங்கள்
5
ஆதியாகமம் 35:1
இவற்றின் பின்னர் இறைவன் யாக்கோபிடம், “நீ எழுந்து, உடனடியாக பெத்தேலுக்கு ஏறிச்சென்று அங்கே குடியிருப்பாயாக; நீ உன் அண்ணன் ஏசாவுக்குப் பயந்து ஓடிச்சென்றபோது, வழியில் உனக்குத் தோன்றிய இறைவனுக்கு அந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டிடுவாயாக” என்றார்.
ஆதியாகமம் 35:1 ஆராயுங்கள்
6
ஆதியாகமம் 35:18
தனது மரணத் தறுவாயில் கடைசி மூச்சு விடும்போது பிறந்த தன் மகனுக்கு அவள், பெனொனி எனப் பெயர் சூட்டினாள். ஆனால் அவனது தந்தையோ அவனுக்கு பென்யமீன் எனப் பெயர் சூட்டினான்.
ஆதியாகமம் 35:18 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்