இறைவன் உனக்கு வானத்தின் பனியையும்,
மண்ணின் வளத்தையும்,
தானியத்தையும், திராட்சைரசத்தையும் நிறைவாகத் தருவாராக.
மக்கள் கூட்டங்கள் உனக்குப் பணி செய்யட்டும்.
பல இனங்கள் உனக்குத் தலை வணங்கட்டும்.
உன் சகோதரர்களுக்கு மேலாக நீ அவர்களை ஆளுகை செய்வாய்,
உன் தாயின் மகன்மார் உனக்குத் தலை வணங்குவார்கள்.
உன்னைச் சபிக்கின்றவர்கள் சபிக்கப்படுவார்களாக.
உன்னை ஆசீர்வதிக்கின்றவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக”
என்றான்.