நான் ஓரேபிலுள்ள மலைப்பாறையின் அருகே உனக்கு முன்பாக நிற்பேன். நீ மலைப்பாறையை அடி. அப்போது மக்கள் குடிப்பதற்கு அதிலிருந்து தண்ணீர் வெளியே வரும்” என்றார். மோசே அவ்விதமே இஸ்ரயேலின் மூப்பர்களின் கண்களுக்கு முன்பாக செய்தார். இஸ்ரயேலர்கள், வாதாடியபடியாலும், அவர்கள், “கர்த்தர் எங்களுடன் இருக்கின்றாரா? இல்லையா?” என்று கேட்டு கர்த்தரை சோதித்தபடியாலும் மோசே அந்த இடத்துக்கு மாசா என்றும், மேரிபா என்றும் பெயரிட்டார்.