இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமர் 8:3

தேவனுடைய நட்பை அனுபவித்தல்
5 நாட்கள்
நீரூற்றுக்காக ஏங்கும் வனாந்திரம் போல உங்கள் ஆத்துமாவில் உணர்கிறீர்களா? இந்த வனாந்திர காலம், தேவனுடைய பிரசன்னத்தை நீங்கள் இன்னும் நெருக்கமாகவும், அதிகாரபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பளித்து, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் காலமாகவும் இருக்கக்கூடும். இந்த வனாந்திர அனுபவத்தில், உங்கள் வாழ்க்கை எள்ளவும் நகராதது போல உங்களுக்கு ஒருவேளை தோன்றலாம். ஆனால் இந்த காலம் உங்களுடைய வாழ்வில் வீணாக்கப்பட்ட காலம் அல்ல என்பதை நீங்கள் உணரும்படி இந்த தியானம் உங்களை உற்சாகப்படுத்தும். நீங்கள் எப்படிப்பட்ட கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும், நீங்கள் தனியாக பயணிக்கவில்லை என்று அறிந்துகொள்ளுங்கள். காரணம், உங்கள் தேவனாகிய கர்த்தர், ஜீவனளிப்பவராகவும், ஆறுதலளிப்பவராகவும், ஒரு நல்ல நண்பனாகவும் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறார்.

மரணத்தின் மீது வெற்றி
7 நாட்கள்
"இது வாழ்க்கையின் மற்றொரு பகுதி" என்று நாம் எப்போதும் கூறப்படுகிறோம், ஆனால் சாதாரணமான வார்த்தைகள் நேசிப்பவரை இழக்கும் வேதனையை குறைக்காது. வாழ்க்கையின் கடினமான சவால்களில் ஒன்றை எதிர்கொள்ளும்போது தேவனிடம் ஓட கற்றுக்கொள்ளுங்கள்.

பளு அதிகம் இல்லாத பயணம் செய்
7 நாட்கள்
மும்முரமான கிறிஸ்துமஸ் காலத்தில், நம்மில் அநேகர் குடும்ப உறவுகள், பண பிரச்சனைகள், அவசர முடிவுகள் மற்றும் ஏமாற்றமளிக்கும் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை உணருகிறோம். ஆகவே தொடர்ந்து வாசியுங்கள். பொறுமையாக ஒரு மூச்சு விடுங்கள். இந்த 'Life Church' இன் வேதாகம திட்டத்தை வாசித்து தேவன் நாம் சுமக்க சொல்லாத அநேக பாரங்களை நாம் சுமந்து கொண்டிருப்பதை உணருங்கள். இந்த பாரங்களை இறக்கி வைத்துவிட்டால் என்ன? பளு அதிகம் இல்லாத பயணம் செயலாம்.

சிறந்த தலைமைத்துவத்திற்கு ஆறு படிகள்
7 நாட்கள்
ஒரு தலைவனாக வளருவதற்கு தயாரா? பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்கள் ஒரு சிறந்த தலைவனாக மாறுவதற்கு தேவையான ஆறு வேதாகம படிகளை கற்றுத்தருகிறார். ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு, நிறுத்த தேவையான தைரியம், வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம், உருவாக்க ஒரு அமைப்பு, துவங்க வேண்டிய உறவு மற்றும் துணிந்து எடுக்க வேண்டிய அபாயங்கள்.