இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 91:3

கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நினைவுகூரல்
5 நாட்கள்
எதிர்காலத்தைக் குறித்தே எண்ணிக்கொண்டிருப்பது நமது இயற்கை சுபாவமாக இருந்தாலும் கடந்த காலத்தை மறந்து விடக்கூடாது. இந்த திட்டம் ஐந்து நாட்களில் உங்களை இன்றைய நிலைமைக்கு உருவாக்கின கர்த்தரின் செயல்களை நினைவுகூரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு வேதபகுதியும் ஒரு சுருக்கமான தியானமும் கிறிஸ்துவுடனான உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு நினைத்துப் பார்க்க உதவும்.

பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை
5 நாட்கள்
சமீபகாலமாக இதுவரை உலகம் பார்த்திராத ஒரு சூழ்நிலையில் இன்று நாம் கடந்து போய்கொண்டிருக்கிறோம். சர்வத்தையும் படைத்து ஆளுகிற ராஜாதி ராஜாவை அண்டிகொண்டால் பிழைத்துகொள்வோம் என்பதை சரித்திரமும் ஒத்துகொள்ளும். இப்படிப்பட்ட காரியங்கள் ஏன் சம்பவிக்கிறது, இந்த சூழ்நிலையில் தேவன் நமக்கு தரும் தீர்வு என்ன, மரணமானாலும் ஜீவனானாலும் அவைகளை குறித்த நமது நம்பிக்கை என்ன என்பதை குறித்து வேதம் நமக்கு என்ன கற்றுகொடுக்கிறது ஆகிய காரியங்களை குறித்து இந்த தியானத்திட்டதின் கீழ் நாம் படிக்க இருக்கிறோம்.

இதன் மூலம் கடவுளைத் தேடு
10 நாட்கள்
மனச்சோர்வு. கவலை. தூண்டுதல்கள் மற்றும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நம்மை மன, உணர்ச்சி மற்றும் ஆன்மீக ரீதியாக பாதிக்கின்றன. இப்படிப்பட்ட காலத்தில் கடவுளைத் தேடுவது கடினமானதாகவும் தேவையற்றதாகவும் தெரிகிறது. "இதன் மூலம் கடவுளைத் தேடு" என்ற திட்டம், உங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், கடவுளின் அமைதியை நீங்கள் அனுபவிப்பதற்காக, கடவுளின் முன்னிலையில் எவ்வாறு செயலூக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கவும் கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேவனோடு உரையாடல்
12 நாட்கள்
'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் - ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்!