இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மாற்கு 11:23

இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்
5 நாட்கள்
நமது கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் என்பது அடிக்கடி கண்டு கொள்ளப்படாமல் போய்விடுகிறது. ஏனென்றால் கர்த்தர் ஏற்கனவே எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறோம். ஆகவே அவரிடம் நாம் பேச வேண்டியதில்லை என்கிறோம். நீங்கள் நேரம் எடுத்து கர்த்தருடன் பேசவும் உங்களுக்கான அவரது சித்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதன் மூலம் உங்கள் வாழ்வை மறு சீரமைப்பு செய்து கொள்ளவும் இந்த வேதபாடத்திட்டம் உங்களுக்கு உதவும். நிகழ்ச்சிகள் நடக்கும் வரை நீங்கள் ஜெபிக்கவும் உற்சாகப்படுத்தப் போகின்றது.

ஒரே விஷயம்
7 நாட்கள்
இந்த மனதை உலைக்கும் உலகில் இயேசுவுக்காக வாழ்வது என்னவென்று நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். இந்த உலகம் ஒரு நூறு மைல்கல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது, நமக்குத் தேவையானதை விடக் கூடுதல் தகவல்கள் நம்முடைய கைகளில் உள்ளன. இது நவீன உலகத்தின் இயல்பா? இப்படிப் பறக்கிற சூழலில் நம்மை எப்படி நிதானப்படுத்திக் கொள்வது? சங்கீதம் 27:4 இல் அதற்கான பதில் உள்ளது – ஒரே ஒரு விஷயம், அந்திரேயா கார்ட்லெஜ்.