இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 6:20

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்
3 நாட்களில்
கவனச்சிதறல்கள் மற்றும் சவால்கள் நிறைந்த உலகில், நோக்கமுள்ள மற்றும் உண்மையுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ நம் இதயங்களைக் காப்பது அவசியம். பொதுவாக பயம், முறுமுறுத்தல், நண்பர்களின் அழுத்தம் மற்றும் ஏதோ ஒன்றில் மனநிறைவு இவற்றைத் தாண்டி வேதத்தில் வேரூன்றிய நடைமுறை பாடங்களை அறிய நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும். பொதுவாக விசுவாசிகள் வாழ்க்கையின் சோதனைகளை மேற்கொள்ளவும் வெற்றியுடன் வழிநடத்தவும், அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், தேவனின் விருப்பத்துடன் அவர்களின் இதயங்களைச் சீரமைக்கவும் தேவன் வாஞ்சிக்கிறார். இதற்காக உதவும் நுண்ணறிவு மற்றும் செயல்படக்கூடிய படிகளை நாம் அறியவும் நன்றியுணர்வை வளர்ப்பதற்கும், உறுதியாக நிற்பதற்கும், அவருடைய மகிமைக்காக தொடர்ந்து நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் ஒன்றாகப் பயணிப்போம்.

தெளிவாக சிந்திக்க போதுமான இடம்
5 நாட்கள்
எல்லாவற்றையுமே செய்ய வேண்டுமென்று முயற்சிக்கும் காரணத்தால், எந்த விஷயத்திலும் விருப்பம் இல்லாதது போல நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா? இந்த வாழ்க்கைப் பயணத்தில் விரும்பியவருடன் பற்பலவற்றை ஒரேநேரத்தில் செய்கிறோம். . .நீங்கள் திறமையாளர்தான். ஆனால் சோர்வடைந்துவிடுகிறீர்கள். அத்தகைய நேரத்தில் காற்றோட்டமான ஒரு அறை உங்களுக்கு சிறிது தேவைப்படும். ஒரு சாதாரணமான ஆனால் ஆச்சரியமான வரவேற்பின் மூலம், கர்த்தர் உங்களுடைய அதிவேகத்தை சமாதானம் நிறைந்த ஒன்றால் இறுதியாக மாற்றியமைக்க வழிவகை வழங்குகிறார். இந்த திட்டம் அதை எப்படியென காண்பிக்கும்.

உங்கள் திருமண வாழ்க்கைக்குள் ஆத்மீய பேரார்வத்தை செலுத்துங்கள்.
7 நாட்கள்
கேரி தாமஸ் அவர்களின் புதிய புத்தகமாகிய "A Lifelong Love" லிருந்து எடுக்கப்பட்ட இவை திருமணத்தின் நித்திய நோக்கங்களைப் பற்றி பேசுகின்றன. மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உயிரை பரப்பும் ஒரு ஊக்கமூட்டும் உறவாக உங்கள் திருமண வாழ்வை அமைக்க நடைமுறை கலையை கற்றுக்கொள்ளுங்கள்.

ஒப்பீட்டிலிருந்து விடுபடுங்கள் அன்னா லைட்டின் 7 நாள் வாசிப்பு திட்டம்
7 நாட்கள்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை விட அபரிமிதமான ஒரு வாழ்வை ஆண்டவர் உங்களுக்கு தருகிறார் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் சோகமான உண்மை என்னவென்றால், ஒப்பீடு உங்களை அடுத்த நிலைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது. இந்த வாசிப்புத் திட்டத்தில், அன்னா லைட் வெளிப்படுத்துகிற ஆழ்ந்த அறிவு, ஒப்பிடுதல் உங்கள் செயல்திறன்களின் மீது இடுகின்ற தடைகளை உடைத்து, ஆண்டவர் உங்களுக்காக அமைத்திருக்கிற சுதந்திரமும் அபரிமிதமுமான வாழ்க்கையை வாழ உதவும்

பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)
7 நாட்கள்
பொதுவாக மனிதர்கள் என்ற முறையில், அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் , நாம் அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி செய்யும் இடங்களில் நமது முதலாளிக்கும் , நம்முடன் இணைந்து பணியாற்றும் குழுவினருக்கும் கணக்கு ஒப்புவிக்கும் பொறுப்புடையவர்களாய் இருக்கின்றோம். ஆனால் , மனித இயல்பானது ,யாருக்கும் கணக்கு ஒப்புவிக்க விரும்புவதில்லை. கடவுளுக்கு கணக்கு ஒப்புவித்தல் என்பது மற்ற எல்லா பொறுப்புடைமைக்கும் பொருந்தக்கூடிய அடிப்படை அம்சமாகும் .

அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்
7 நாட்கள்
நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் 'அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்' என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம்.

ஒரே விஷயம்
7 நாட்கள்
இந்த மனதை உலைக்கும் உலகில் இயேசுவுக்காக வாழ்வது என்னவென்று நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். இந்த உலகம் ஒரு நூறு மைல்கல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது, நமக்குத் தேவையானதை விடக் கூடுதல் தகவல்கள் நம்முடைய கைகளில் உள்ளன. இது நவீன உலகத்தின் இயல்பா? இப்படிப் பறக்கிற சூழலில் நம்மை எப்படி நிதானப்படுத்திக் கொள்வது? சங்கீதம் 27:4 இல் அதற்கான பதில் உள்ளது – ஒரே ஒரு விஷயம், அந்திரேயா கார்ட்லெஜ்.

அனைத்தையும் கொடுத்து, அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுவது
9 நாட்கள்
புத்தகத்திலிருந்து ஒரு மேற்கொள் "எல்லாவற்றையும் கொடுத்து, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளுவது". Hobby Lobbyயின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் கீரின், உதாரத்துவமான வாழ்க்கை, சிறந்த பலனை தனிப்பட்ட வாழ்க்கையிலும், சக்தி வாய்ந்த பாரம்பரியத்தை குடும்பத்திற்கும், நாம் சந்திக்கிற அனைவரையும் மாற்றுகிற சக்தியையும் உடையது என்று பகிர்ந்து கொள்ளுகிறார்.

வருகையின் தோரணைகள்: தினசரி கிறிஸ்துமஸ் பக்தி
27 நாட்கள்
கிறிஸ்மஸ் சீசனில் நாம் எப்படி நம்மை காட்டிக்கொள்கிறோம் என்பது, அட்வென்ட்டின் அற்புதத்தின் அனுபவத்தில் எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறது. இயேசுவிடம் சரணடைவதற்கும், அவர் மீது கவனம் செலுத்துவதற்கும், நமது அரசரின் அருளைத் தழுவுவதற்கும் ஊக்கமளிக்கவும், இந்த 4 வார தினசரி பக்தியில் ஐந்து வெவ்வேறு தோரணைகளை நீங்கள் நகர்த்தும்போது: கண்கள் நிலையாக, தலையை உயர்த்தி, முழங்கால்கள் வளைந்தவை, கைகளைத் திறந்தவை மற்றும் கைகள் அகலமாக.

இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்
28 நாட்கள்
நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.