இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 14:31

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
4 நாட்களில்
தேவனின் நோக்கத்தை முன்பாக வைத்து வாழ விரும்பும் நம் வாழ்வில் நமக்கு நம் நம்பிக்கையை சோதிக்கும், பயத்தை தூண்டி, குற்ற உணர்ச்சியாலும் வருத்தத்தாலும் நம்மைச் சுமையாக்கும் சவால்களை வாழ்க்கை அடிக்கடி கொண்டுவருகிறது. ஆனாலும், நம்முடைய விசுவாசம் என்பது தேவனின் நோக்கமும் கிருபையும் நமக்கு துணையாக நின்று ஜெயிப்பதற்கான பலத்தை நமக்கு அளிக்கிறது. சந்தேகங்களை எதிர்கொள்வதற்கும், அச்சங்களை வெல்வதற்கும், மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கும், வருத்தத்தை அறிக்கை செய்வதற்கும் இந்த வேதாகமப் பாடங்களையும் நடைமுறைப் படிகளையும் ஆராய உங்களை அழைக்கிறது. தேவனின் வாக்குறுதிகளை நம்பி, அவருடைய கிருபையில் நம்பிக்கையுடன் நடக்க, தைரியமாக வாழ இந்தப் பிரதிபலிப்புகள் உங்களைத் தூண்டட்டும்.

மனப்பான்மை
7 நாட்கள்
ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியான மனப்பான்மையை கொண்டிருப்பது உண்மையாகவே ஒரு சவால் தான். இந்த ஏழு நாள் வாசிப்பு திட்டம் உங்களுக்கு ஒரு வேதாகம கண்ணோட்டத்தை கொடுப்பதோடு ஒவ்வொரு நாளும் வாசிக்க ஒரு குறுகிய பகுதியையும் கொண்டுள்ளது. வேதப்பகுதியை வாசித்து, உங்களையே நேர்மையாக ஆராய சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சூழ்நிலைக்குள் தேவனை பேச அனுமதியுங்கள்.

ஆண்டவர் தமது கரத்தால் உங்களை பிடிக்க அனுமதியுங்கள்
7 நாட்களில்
மிகவும் பெரியவராகவும், மகத்துவமானவராகவும், சர்வவல்லமை உடையவராகவும் இருக்கும் ஒரு ஆண்டவரைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறதா? உங்களுக்காகக் கரத்தை நீட்டும் ஒரு தந்தையைப் போல, ஆண்டவரை, ஒரு தனிப்பட்ட முறையில் புரிந்துகொள்ள, இந்தக் வாசிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும்.

இறுதி பாடங்கள்: ஒரு புனித வாரத்திற்கான திட்டம்
10 நாட்கள்
இந்த புனித வாரத்தில் நாம் சற்று வேகத்தை குறைத்து, கிறிஸ்து உலகத்திலிருந்த இறுதி நாட்களிலிருந்து கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும், அவர் கொடுக்க நேரம் எடுத்துக்கொண்ட பாடங்கள் அல்லது பரிசுகளை நாம் ஒவ்வொரு நாளும் பெற்றுகொள்வோம். கிறிஸ்துவுக்கு அதிக முக்கியமாக இருந்தவையாகிய அவரது மக்களை நாம் நேசிக்க வேண்டும் என்பதையும் அவரை பின்பற்ற வேண்டும் என்பதையும் பற்றி உங்களுக்கு ஒரு புதிய நினைப்பூட்டுதல் வேண்டுமா? இந்த புனித வாரத்தில் அவர் உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார்?

விசுவாசம் தளரும் போது: சந்தேகத்தின் நிழலில் தேவனைக் கண்டடைய 10 நாட்கள்
10 நாட்கள்
ஒருவர் விசுவாசத்தோடும் சந்தேகத்தோடும் போராடும்போது தனிமையாகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் உணரக்கூடும். சிலர் மெளனமாக கஷ்டங்களை சகிக்கின்றனர், ஆனால் மற்றவர்களோ சந்தேகம் விசுவாசத்தோடு பொருந்தாது என்று நினைத்து விசுவாசத்தையே கைவிட்டுவிடுகின்றனர். டோமினிக் டன் என்பவர் இது மிகவும் கவலைக்குரியது என்றும் மிக தவறானது என்றும் நம்புகிறார். கேள்வி கேட்பது இயல்பானது மாத்திரம் அல்ல, ஒரு வளமான மற்றும் திடமான விசுவாசத்திற்கு வழிவகுக்கக் கூடியது என்றும் வேதாகமத்திலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் சுட்டிக் காட்டுகிறார். இந்த 10-நாள் வாசிப்புத்திட்டத்தில் விசுவாசம் மற்றும் சந்தேகத்தைப் பற்றி ஆராயுங்கள்.

30 நாள் அற்புதங்கள்
30 நாட்களில்
இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது நம்புவதற்கரிய பல காரியங்களை மக்களுக்குச் செய்தார். இந்த வேதத் திட்டத்தை வாசிக்கும் நீங்கள் தனிப்பட்ட விதத்தில் இயேசுவை முழுமையாக அனுபவித்து உணருவீர்கள் என்று நம்புகிறோம். அதேசமயம், நாம் இந்த உலகத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைக் காண விரும்பி, தேவன் மீதுள்ள விசுவாசத்தை விட்டுவிடவும் கூடாது.