அதுனால யேசு எத்துரி, காளின பெதர்சி, கெரெயொத்ர, “சத்தவாக்குலாங்க இரு; கம்முந்து இரு” அந்தேளிரு. ஆக காளி அடகியோத்து. கெரெ தும்ப அமெதியாங்க ஆயோத்து. யேசு அவுரோட சீஷருகோளொத்ர, “நீமு ஏக்க ஈங்கே அஞ்சுத்தாரி? நானு நிம்முன காப்பாத்துவே அந்து இன்னுவு நிமியெ நம்பிக்கெ இல்லவா?” அந்து கேளிரு.