Logo YouVersion
Îcone de recherche

மன்னிப்புExemple

மன்னிப்பு

Jour 7 sur 7

உன் மன்னிக்கும் மனப்பான்மை பரலோகத்தை பூமிக்கு கொண்டு வரும்!

வாழ்வும் மரணமும் நாவின் அதிகாரத்தில் இருப்பதாக ஆண்டவரின் வார்த்தை நமக்குச் சொல்கிறது. இது உண்மைதான்... அணுகுமுறைகள் நம் சக மனிதர்களுக்கும் நமக்கும் ஜீவனையோ மரணத்தையோ கொண்டுவரும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்.

இதனால், மனிதன் ஒரு பார்வையால் காயப்படுத்த முடியும்; ஒரு வார்த்தையால் கொல்லமுடியும்; அல்லது கசப்பான, மௌனமான மன்னிப்பின்மையால் புதைக்க முடியும். ஆனால் இதற்க்கு நேர்மாறானதும் உண்மைதான்...உனக்கு.

பிரபஞ்சத்தின் அதிபதியான ஆண்டவரின் உடைமையான உனக்கு!

நாம் வேதாகமத்தில் வாசிப்பதுபோல், பணத்தினால் மீட்கப்படாமல், கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டாய். (பார்க்க 1 பேதுரு 1:18-19)

கிறிஸ்துவை உன் ஆசாரியராக்கி, அவருடைய சீடராக இருக்கும் நீ... ஒரு பார்வையால், சோர்ந்து இருப்பவர்களை உயர்த்த முடியும் என்பதை அறிந்து கொள்! மன்னிப்பு என்ற வார்த்தையின் மூலம், உன் பக்கத்து வீட்டுக்காரர் முகத்தில் மீண்டும் ஒரு புன்னகையை வரவழைக்கலாம்! மௌனத்திலும் கூட, ஏதேனும் ஒரு சூழ்நிலையில் ஒருவரின் கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருப்பதன் மூலம் ஆற்றுதல் கொண்டுவர முடியும்.

இந்த அழகான பொறுப்பு ஆண்டவரால் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீ அவரைப் போல நேசிக்கவும், அவரைப் போல மன்னிக்கவும், அவரைப் போல செயல்படவும் இந்த பூமியில் இருக்கிறாய். வேதாகமம் கூறுவது போல் உனது பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, மாறாக அவருடைய ஆவியினால்! (சகரியா 4:6 ஐப் பார்க்கவும்)

இன்று, பரலோகத்தை பூமிக்கு கொண்டு வா, போரின் வெப்பத்தில் அன்பையும், கடும் சண்டைகளுக்கு மத்தியில் மன்னிப்பையும் கொண்டு வா. இது எளிதல்ல என்றாலும், நீ செல்லும் எல்லா இடங்களிலும் ராஜ்யத்தின் கொள்கைகளின் தூதராக இரு!

பின்குறிப்பு : மன்னிப்பு குறித்த இந்தத் தொடரின் முடிவிற்கு நாம் வந்துள்ளோம். படித்ததற்கு நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவும், இன்னும் பெரிய அளவில் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மன்னிப்பை வழங்கவும், நான் ஜெபிக்கிறேன்! இந்தத் தொடரின் போது யாரையாவது அல்லது உங்களை நீங்களே மன்னிக்கும் முடிவை நீங்கள் எடுத்திருந்தால் எங்களுக்கு இங்கே தெரியப்படுத்துங்கள் : tamilmiracles@jesus.net ... நன்றி.

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

À propos de ce plan

மன்னிப்பு

சில சமயங்களில் மன்னிப்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. மனுஷீகத்தில் மன்னிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவரின் உதவியோடு அது கூடும். மன்னிப்பின்மை நம் வாழ்வில் பல ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் வேதாகமத்தின் மூலம் மன்னிப்பைப் பற்றி ஆராய்வோம், கற்றுக்கொள்வோம்.

More