Logo YouVersion
Ikona vyhledávání

மன்னிப்புUkázka

மன்னிப்பு

DEN 5 z 7

அவள் தன் சகோதரனைக் கொன்றவர்களை மன்னித்தாள்…

"அதிசயம்" என்ற வார்த்தையைக் கேட்கும்போது, நோயிலிருந்து குணம்பெறுதல் அடிக்கடி நினைவுக்கு வரும். கைகால்கள் மீண்டும் வேலை செய்யத் தொடங்கும் மக்கள், மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர்கள் கூட.

ஆனால், நான் சொல்லத் துணிந்தால், அற்புதங்களுக்கு வேறு பல முகப்புகளும் உண்டு... அவை இதயத்திற்குள் நடக்கும் அற்புதங்களாகவும் இருக்கலாம்! உள்ளார்ந்த குணப்படுத்துதல், இரட்சிப்பு, இயேசுவுக்கு மறு அர்ப்பணிப்பு... மேலும் மன்னிப்பு ஆகியவற்றின் வல்லமையான தருணங்கள்.

மன்னிப்பு ஒரு அதிசயம். "அனுதினமும் ஒரு அதிசயம்" வாசகருக்கு சபாஷ்... அவள் உள்ளத்திற்குள் அவர் செய்ததற்காக நான் ஆண்டவரைப் போற்றுகிறேன். இதோ அவளது மிகக் குறுகிய ஆனால் மிகவும் வல்லமை நிறைந்த சாட்சி: "என் சகோதரன் கொல்லப்பட்டதை குறித்து நான் ஒரு முடிவிற்கு வந்துள்ளேன்.. அவனைக் கொன்றவர்களை எனக்குத் தெரியாவிட்டாலும் நான் மன்னித்துவிட்டேன்."

மன்னிக்க முடியாதவர்களை ஒருவர் எப்படி மன்னிப்பார்? மனிதாபிமான அடிப்படையில், இது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஆண்டவருடன் அது சாத்தியம்! எப்படி?

மன்னிப்பு என்பது ஒரு அன்பின் செயல். ரோமர் 5:5 கூறுகிறது, "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது." ஆண்டவர் தம் ஆவியால் நம் இதயங்களில் உண்மையான அன்பை ஊற்றி, நம்மை மன்னிக்கும்படி செய்கிறார்.

மன்னிப்பு என்பது கீழ்ப்படிதல். கொலோசெயர் 3:13ல் நாம் வாசிக்கிறோம், “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." பழிவாங்கும் ஆசையை விட்டுவிட்டு எதிரிகளை ஆசீர்வதிப்பது ஆண்டவருக்கு கீழ்ப்படியும் செயலாகும். ஒரு வெகுமதியை நாம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர் சொல்வதை செய்வதாகும்.

இன்று நீ மன்னிக்க முடியாத நிலைமையை எதிர்கொண்டிருந்தால், உனக்காக நான் ஜெபிக்க விரும்புகிறேன்… “ஆண்டவரே, என் சகோதரன், என் சகோதரி எதிர்கொண்டிருக்கும் இந்த சிக்கலான சூழ்நிலையை நீர் காண்கிறீர். அந்த ஒருவரை மன்னிப்பது மனுஷீகத்தில் மிகவும் கடினம். ஆனால் உம்முடைய ஆவியால் அது சாத்தியம் என்று நான் நம்புகிறேன்! உம்முடைய ஜீவ சுவாசத்தை இதை வாசிப்பவரின் வாழ்க்கையின் மீது ஊதும், பரிசுத்த ஆவியானவரே... இவருடைய இதயத்தில் ஊற்றப்பட்டுள்ள உமது ஆற்றல் மற்றும் அன்பினால் இவரது எதிரிகளை இப்போதே மன்னிக்க உதவும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

Den 4Den 6

O tomto plánu

மன்னிப்பு

சில சமயங்களில் மன்னிப்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. மனுஷீகத்தில் மன்னிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவரின் உதவியோடு அது கூடும். மன்னிப்பின்மை நம் வாழ்வில் பல ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் வேதாகமத்தின் மூலம் மன்னிப்பைப் பற்றி ஆராய்வோம், கற்றுக்கொள்வோம்.

More

Podobné plány