Logo YouVersion
Ikona vyhledávání

மன்னிப்புUkázka

மன்னிப்பு

DEN 3 z 7

நீ சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!

இன்று, கர்த்தர் உன்னிடம் பேசட்டும், தனிப்பட்ட முறையில் உனக்கு சவால் விடுக்கட்டும், என் அன்பரே.

நீ சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உனக்காக சேமித்து வைத்திருக்கும் வாழ்க்கையை நீ சுதந்திரத்துடன் வாழ. உன் ஒவ்வொரு அடியும் என்னுடைய கிருபையால், என்னுடைய ஆவியால் வழிநடத்தப்பட வேண்டும்.

என் ஜீவனையும் மகிழ்ச்சியையும் உனக்குள் நிரப்ப விரும்புகிறேன். நீ சுதந்திரமாக இருக்க, விடுபட்டு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!

ஆனால் உனக்கு ஏற்கனவே தெரிந்தவாறு, நீ மன்னிக்காத ஒவ்வொரு முறையும், அது உன்னை என்னிடமிருந்து சிறிது தூரமாக்கும்.

மேலும் நேரம் கடந்து செல்லச் செல்ல... நீ அதிலேயே தங்கியிருந்து அதை பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறாய்.

நான் உன்னை விடுவிக்க விரும்புகிறேன். எப்படி மன்னிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க. அவர்களின் வார்த்தைகளினாலும் ஆணவத்தினாலும் உனக்கு ஏற்பட்ட வலியை மறக்க... இதன்மூலம், இறுதியாக, நீ வெறுப்பு, வலி, கசப்பு, கோபம், பழிவாங்கும் ஏக்கத்தில் இருந்து விடுபட்டு வாழ்வாய்.

நான் உன்னை மீட்டெடுத்து குணமாக்க விடு. உன் வலியையும் கசப்பையும் சிலுவையின் அடிவாரத்தில் போடு. இந்த சூழ்நிலையை, இந்த மன்னிப்பின்மையை என் கைகளில் கொடு.

உனக்கு உதவவும், எழுந்து உன்னை மீட்டெடுக்கவும் என்னிடம் கேள். நான் இங்கே இருக்கிறேன். இங்கே தான் இருக்கிறேன், உனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்.

ஒன்றாக, இது சாத்தியம். என்னுடன், மன்னிப்பது சாத்தியம். உன் எதிரிகளை ஆசீர்வதிக்க. கடந்த காலத்தை மறக்க. என்னுடன், சாத்தியம்.

நீ சுதந்திரமாக, விடுதலையோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்...

Písmo

Den 2Den 4

O tomto plánu

மன்னிப்பு

சில சமயங்களில் மன்னிப்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. மனுஷீகத்தில் மன்னிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவரின் உதவியோடு அது கூடும். மன்னிப்பின்மை நம் வாழ்வில் பல ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் வேதாகமத்தின் மூலம் மன்னிப்பைப் பற்றி ஆராய்வோம், கற்றுக்கொள்வோம்.

More

Podobné plány