தாவீதின் சங்கீதங்கள் 预览

தாவீதின் சங்கீதங்கள்

73天中的第71天

ஓட்டை இருதயம்

மேரி என்னும் ஒரு பெண்மணியின் மகன் 17 வயதில் அதிகமான போதை மருந்தை எடுத்துக் கொண்டதால் இறந்து போனான். பல வாரங்களாக அந்தத் தாய் சோகத்தில் மூழ்கியிருந்தாள். அவளால் எந்த வேலையையும் செய்ய முடியாத அளவுக்கு சோகம் அவளை சூழ்ந்து கொண்டது. ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி அவளை சந்தித்து எல்லா சோகங்களையும் ஒதுக்கி வைக்கும்படி ஆலோசனை சொன்னார். “உன் வேதனைகளை எல்லாம் கர்த்தரிடம் கொடுத்துவிடு. அவர் நீ இழந்து போனவைகளைவிட நூறு மடங்கு திரும்பத் தருவார்” என்றார்.

அந்த இரண்டு பெண்களும் ஜெபித்தார்கள். பின்னர் தொடர்ந்து ஜெபிப்பதாகச் சொல்லிவிட்டு வயதானவர் புறப்பட்டுச் சென்றார். மேரி எழுந்து பிறருக்கு எந்த வகைகளில் எல்லாம் உதவி செய்யலாம் என்று சிந்திக்கத் துவங்கினார். தனக்கு நிகழ்ந்த கொடுமை மற்ற குடும்பங்களுக்கு ஏற்படாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டமிட்டார். இப்போது மேரி போதைக்கு அடிமையானவர்களுக்கு ஒரு மறுவாழ்வு நிலையத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது அவரது அறிவிப்புப் பலகையில் அவரை அம்மா என்று அழைக்கிற சுமார் நூறு இளம் பெண்கள் மற்றும் ஆண்களின் புகைப்படங்களை அவர் ஒட்டி வைத்திருக்கின்றார். அவர் இழந்ததைவிட நூறு மடங்காகக் கடவுள் அவருக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார். இறந்து போன மகனைப் பற்றிய வேதனை இன்னும் அவரது இருதயத்தில் இருந்தாலும், அவரது வாழ்க்கை ஒரு நோக்கத்தால் நிரப்பப்பட்டு இருப்பதால், அவரும் அவரது வயதான நண்பரும் ஊழியத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

நமது மனதின் வேதனைகளைக் கடவுளிடம் நமது ஜெபத்தில் ஊற்றிவிடும் போது நமது வேதனைகளைக் குறைக்கும் வகையில் அவர் நமது வாழ்க்கையை நிறைவுபடுத்துவார்.

சிந்தனை : நமது வாழ்க்கை பல வேதனைகள் நிறைந்தது. அவற்றை கடவுளிடம் இறக்கி வைத்தால், அவர் சமாதானத்தால் நம்மை நிரப்புவார்.

ஜெபம் : கர்த்தாவே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர். ஆமென்.

读经计划介绍

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

相关题材的计划