தாவீதின் சங்கீதங்கள் 预览

தாவீதின் சங்கீதங்கள்

73天中的第67天

ஃபேமஸ்

ராபர்ட் இங்கர்சால் என்பவர் ஒரு எழுத்தாளர். அவர் கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர் அவர். ஒரு நாள் ராணுவத் தளபதியான லியு வாலஸ் உடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் இங்கர்சால். வாலஸ் நன்றாக எழுதுபவர், அவரும் கிறிஸ்துவை விசுவாசிப்பவர் அல்ல. ஆகவே இயேசு ஒரு ஏமாற்றுக்காரன் என்று நீங்கள் ஒரு புத்தகம் எழுதலாமே என்று இங்கர்சால் கூறினார். அதற்காக இயேசுவைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து படித்த வாலஸ் கடைசியில் இயேசுவின் தீவிர பக்தனாக மாறினார். பென்ஹர் என்னும் அருமையான நாவலையும் இயேசுவின் வரலாற்றைத் தழுவி எழுதினார். அதே நாவல் பின்னர் 1959-இல் பிரபல திரைப்படமாகவும் வெளிவந்தது.

திறந்த மனதுடன் கடவுளின் வார்த்தையைப் படித்த யாரும் வாழ்க்கையில் மாற்றமடையாமல் இருக்க முடியாது. கடவுள் இல்லை என்று நினைத்துக் கொண்டு வாசிப்பவர்களில் பலர் மாற்றத்தை அடையாமல் இருந்தாலும், பலர் வேதாகமத்தை வாசித்தபின் கடவுள் இருக்கின்றார் என்று நம்பி, இயேசுவைத் தங்கள் ஆண்டவராக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஆண்டவர் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் படைத்து புகழுடன் இருந்தாலும், அவரது வார்த்தையாகிய வேதாகமத்தைத் தான் அவர் அதிகமாக மகிமைப்படுத்தியிருக்கிறார். வேதாகமமானது பலரது வாழ்க்கையை மாற்றுவதாக, பலரது தீமைகளைச் சுட்டிக் காட்டுவதாக. பலரது பயங்களையும் சந்தேகங்களையும் அகற்றுவதாகவும், பலரை ஆறுதல் படுத்தியதாகவும் இருந்திருக்கின்றது. உலகத்தின் பெரும் பகுதியான மக்கள் தங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக வேதாகமத்தை வைத்திருக்கின்றனர். வேதாகமத்தின் மகத்துவங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

சிந்தனை : வார்த்தையால் உலகங்களை உருவாக்கிய இயேசு, வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார். வார்த்தை நம் வாழ்வில் மகிமைப்படுத்தப்படுகின்றதா?

ஜெபம் : கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும் போது உம்மைத் துதிப்பார்கள். நானும் உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.

读经计划介绍

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

相关题材的计划