தாவீதின் சங்கீதங்கள் 预览

தாவீதின் சங்கீதங்கள்

73天中的第70天

வாய்ப்பூட்டு

ஆபிரகாம் லிங்கன் தேர்தலுக்கு முன் நல்ல பேச்சாளராக இருந்தார். ஆனாலும் மிகவும் குறைவாகவே பேசினார். அமெரிக்க அதிபரான பின்பு அவரது பேச்சுகள் நன்றாக இல்லை. திடீரென்று பேசச் சொல்லும் போது அவரால் நன்றாகப் பேச முடியாது என்பதால், எழுதி வைத்துப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். “நான் மவுனத்தைத் தேர்ந்தெடுக்கவே விரும்புகிறேன். அது ஞானமுள்ளதோ, இல்லையோ எனக்குத் தெரியவில்லை. இந்தக் காலத்தில் தன் நாவை அடக்குகிற மனிதனைக் கண்டுபிடிப்பது தான் கடினமாக இருக்கின்றது.” என்றார். 

”அவர் ஒரு வாக்கியத்தை முடிப்பதற்கு முன்பாகவே அதன் தவறுகளை சரி செய்ய வேண்டியதாக இருந்தது” என்றார் அவரது பேச்சைக் கேட்ட ஒருவர். தேர்தல் காலத்தில் மக்கள் விரும்பிக் கேட்கும் அளவுக்கு சுவராசியமாகப் பேசியவர் அதிபரானதும் அசையாமல் தனது உதவியாளர்கள் எழுதிக் கொடுத்தவற்றையே வாசித்தார். ஒரு பெரும் கூட்டத்தில் அவரைப் பேசும்படி மக்கள் வற்புறுத்தினார்கள். “எனது பதவியில் முட்டாள்த்தனமாக நான் உளறாமல் இருப்பது தான் முக்கியம்” என்றார் அவர். “உங்களால் முடிந்தால் உளறாமல் இருங்கள்” என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர். “எதையும் பேசாமல் இருப்பதுவே உளறாமல் இருப்பதற்கு வழியாக இருக்கிறது” என்றார் ஆபிரகாம் லிங்கன்.

கர்த்தரின் பிள்ளைகள் என்ற நிலையில் முட்டாள்த்தனமாக உளறக் கூடாது. நம்மால் நம் நாவை அடக்குதல் கடினமானதாகும். ஆனால் கடவுளின் உதவியால் அது முடியும்.

சிந்தனை : கடவுளின் பிள்ளைகள் உளறக்கூடாது. அவரது வசனங்களை நமது வாயிலிருந்து பிறர் எதிர்பார்ப்பார்கள்.

ஜெபம் : கர்த்தாவே, என் வாய்க்குக் காவல்வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். ஆமென். 

读经计划介绍

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

相关题材的计划