இயேசு – உலகத்தின் ஒளிPavyzdys

இயேசு – உலகத்தின் ஒளி

4 diena iš 5

ஒளியின் வல்லமை்

வியாதிப்பட்ட தன்னுடைய சரீரத்தில் மரணத்தின் இருள் இருந்தபோதிலும், அகஸ்டின்-ஜீன் ஃப்ரெஸ்னெல் தனது சக்திவாய்ந்த ஒளியை கண்டுபிடிக்க தொடர்ந்து பிரயாசப்பட்டார். இறுதியாக, 1820ன் முற்பகுதியில், அவர் பிரான்சின் கார்டூரன் கலங்கரை விளக்கத்தில் முதல் ஃப்ரெஸ்னல் லென்ஸை பரிசோதனை செய்தார். அந்த லென்ஸ், நிலத்திலிருந்து பல மைல்களுக்கு அப்பால் கடலில் உள்ள இருட்டான பகுதிகளை பார்வையிட்டு திசை கண்டறிய மாலுமிகளுக்கு பெரிதும் உதவியது. “ஒரு மில்லியன் கப்பல்களைக் காப்பாற்றிய கண்டுபிடிப்பு” என்று பெருமையுடன் அழைக்கப்படும் ஃப்ரெஸ்னெலின் இந்த கண்டுபிடிப்பு 1860இல் ஆயிரக்கணக்கான கலங்கரை விளக்கங்களில் இடம்பெற்றது. அவர் 1827 ஆம் ஆண்டில் வெறும் முப்பத்தொன்பது வயதில் காசநோயால் மரித்தாலும், அவரது லென்ஸில் இருந்து வரும் ஒளியானது காலகாலமாய் எண்ணற்ற கடல் பயணிகளின் உயிரைக் காப்பாற்றக்கூடியதாய் அமைந்தது.

தேவன் தன்னுடைய நேர்த்தியான திட்டத்தின் பிரகாரம், தன்னுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை தேர்ந்தெடுத்து, இருள் சூழ்ந்த உலகத்திற்கு ஒளிகொடுக்கும்பொருட்டு அனுப்பினார். யோவான் “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1 யோவான் 1:5) என்று எழுதுகிறார். இயேசு ஜீவனைக் குறித்தும் மன்னிப்பைக் குறித்தும் நற்செய்தியைப் பிரசங்கித்து, பாவம் மற்றும் மரணம் என்னும் இருளை அறவே அகற்றினார் (வச. 2,9). அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்... இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (வச. 7).

ஃப்ரெஸ்னலைப் போன்று, இயேசுவும் தன்னுடைய 33ஆம் வயதில் மரித்தார். ஆனால் அவர் உயர்ந்தெழுந்து, அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு ஒளியாகவும் ஜீவனாகவும் திகழ்கிறார் (அப்போஸ்தலர் 16:31). கிறிஸ்துவின் மூலம், தேவனுடைய ஒளியின் வல்லமையில் நாம் நடக்கவேண்டிய பாதையை தெரிந்துகொள்கிறோம்.

கிறிஸ்துவின் ஒளியில் நடப்பது என்பது உங்களைப் பொறுத்தவரையில் என்ன அர்த்தம் கொடுக்கிறது? எந்த நடைமுறை வழியில் அவருக்காய் நீங்கள் பிரகாசிக்கமுடியும்?

இயேசுவே, இந்த உலகத்திற்கும் என்னுடைய உள்ளத்திற்கும் நீர் காண்பித்த வெளிச்சத்திற்காய் உமக்கு நன்றி. உம்முடைய வல்லமையினால் உம்முடைய அன்பையும் வழிகளையும் மற்றவர்களுக்கு பிரதிபலிக்க எனக்கு தயவாய் உதவிசெய்யும்.

Šventasis Raštas

Apie šį planą

இயேசு – உலகத்தின் ஒளி

கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தம் நமக்குள்ள இருளை உணர்ந்து கொள்வதில் ஆரம்பிக்கிறது. அந்த இருளுக்கு ஒளியேற்றும் இயேசு கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டாடுகிறது. அவருடைய ஒளியின் பிரசன்னத்தில் நாம் ஒருநாள் விடுவிக்கப்படுவோம் என்பது நம்முடைய ஊக்கம் ஆகிறது, கிறிஸ்துவின் மேல் நம்பிக்கைகிறது. இந்த விடுமுறை காலத்தில் அந்த பிரகாசமான ஒளியின் மீது கவனம் செலுத்துவோம். நமது அனுதின மன்னா இந்த பத்து பிரதிபலிப்புகளால் இந்த கிறிஸ்துமஸில் உங்கள் வாழ்வில் இயேசு கிறிஸ்துவின் ஒளியேற்றும் வழிகளை திறக்கிறது .

More