இயேசு – உலகத்தின் ஒளிSampel

இயேசு – உலகத்தின் ஒளி

HARI KE 2 DARI 5

மெய்யான ஒளி

நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஒரு ஹோட்டலின் உச்சியிலிருந்து, மிகவும் பிரகாசமான ஒளிக்கற்றைகளில் ஒன்று பிரகாசிக்கிறது. ஒரு புத்தகத்தை பல மைல்கள் தூரத்திலிருந்தும் அந்த ஒளியின் உதவியோடு படிக்கும் அளவிற்கு அது பிரகாசமாயிருந்தது. இந்த ஒளியானது இரவில் பூச்சிகள், அவற்றை உண்ணும் வெளவால்கள் மற்றும் வெளவால்களை உண்ணும் ஆந்தைகள் ஆகிய அனைத்து ஜீவராசிகளையும் தன்பால் ஈர்க்கும் அளவிற்கு வலிமையானதாய் இருந்தது. இந்த வழக்கத்திற்கு மாறான பிரகாசத்தினால், நகர விளக்குகள் சமீபத்தில் மைல்களுக்கு அப்பால் ஒரு பெரிய வெட்டுக்கிளி கூட்டத்தை தன்பால் ஈர்த்தது.

பரலோகத்திலிருந்து பிரகாசிக்கிற ஒளியானது இன்னும் பிரகாசமானது. ஆனால் எந்த உணவுச்சங்கிலிக்கும் உயிர்களை பலியாகவிடாமல், வருகிற அனைத்து ஜீவராசிகளுக்கும் இந்த ஒளி உயிர்கொடுக்கும். யோவான் இந்த ஒளியை, “உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை... அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான் 1:9-10,12) என்று சித்தரிக்கிறார்.

இயேசுவோ, “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவான் 8:12) என்று சொன்னார். அவரது பரிபூரணமான, அன்பான வாழ்க்கையின் ஒளியானது, இருளிலிருந்து வெளிவர பிராயாசப்படும் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரே மெய்யான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக பிரகாசிக்கிறது. அவருடைய சிலுவை மற்றும் திறந்திருக்கிற கல்லறையின் மூலமாக அவரை விசுவாசிக்கும்படியாகவும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டும் அழைப்பு விடுக்கிறார். அதினால் நாம் அவருடைய புத்திரர்களாய் மாறி அவருடைய அன்பில் புதிய ஜீவியத்தை துவங்கலாம்.

கர்த்தருடைய மெய்யான அந்த ஒளி உங்களுடைய வாழ்க்கையில் எந்த விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது? அவருடைய அந்த அன்பை எந்த வழியில் மற்றவர்களுக்கு இன்று நீங்கள் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள்?

ஒளி மற்றும் ஜீவனின் அதிபதியே, என்னை இருளிலிருந்து மீட்டதற்காய் உம்மை துதிக்கிறேன். உம்முடைய ஒளியை பிரகாசிக்க இன்று எனக்கு உதவிசெய்யும்!

Firman Tuhan, Alkitab

Tentang Rencana ini

இயேசு – உலகத்தின் ஒளி

கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தம் நமக்குள்ள இருளை உணர்ந்து கொள்வதில் ஆரம்பிக்கிறது. அந்த இருளுக்கு ஒளியேற்றும் இயேசு கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டாடுகிறது. அவருடைய ஒளியின் பிரசன்னத்தில் நாம் ஒருநாள் விடுவிக்கப்படுவோம் என்பது நம்முடைய ஊக்கம் ஆகிறது, கிறிஸ்துவின் மேல் நம்பிக்கைகிறது. இந்த விடுமுறை காலத்தில் அந்த பிரகாசமான ஒளியின் மீது கவனம் செலுத்துவோம். நமது அனுதின மன்னா இந்த பத்து பிரதிபலிப்புகளால் இந்த கிறிஸ்துமஸில் உங்கள் வாழ்வில் இயேசு கிறிஸ்துவின் ஒளியேற்றும் வழிகளை திறக்கிறது .

More

Rencana Terkait