ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?Ukázka

பூட்டியிருக்கும் கதவைத் திறக்கக் கூடிய திறவுகோல் தான் ஜெபம்.
இன்று, எரேமியா 29:11 பற்றிய தியானத்தை நாம் நிறைவுக்குக் கொண்டு வருகிறோம்.
வேதாகமம் கூறுகிறது, "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” (பார்க்கவும், எரேமியா 29:11)
உங்கள் எதிர்காலத்திற்காக தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். ஜெபத்தில் அவரை நோக்கிக் கூப்பிடுவது தான், அவரது திட்டத்திற்குள் நுழைவதற்கான முதல் படியாகும்.
இந்த வாரத்தில் நாம் கவனம் செலுத்திய வேதாகம பகுதியில், எரேமியா 29: 11வது வசனத்தை பின்தொடர்ந்து ஆண்டவர், கீழ்க்கண்ட வாக்குத்தத்தங்களை நமக்கு அளிக்கிறார்.
“அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (எரேமியா 29:12-14)
உங்கள் எல்லா கஷ்டங்களின் போதும் நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடலாம்; ஏனெனில், அவர் உங்களுக்குச் செவி கொடுப்பார். உங்கள் சூழ்நிலைகளை அவர் கவனித்துக்கொள்ள அனுமதியுங்கள்!
இயற்கையாகவே, நாம் வெறுமையையும் தனிமையையும் வெறுக்கிறோம். ஆகவே, உங்கள் பிரச்சனைகளை ஆண்டவர் மீது வைத்து விடுங்கள். மேலும், அவருடைய சமூகத்தைத் தொடர்ந்து நாடுங்கள். காரியங்கள் சாத்தியமற்றதாகத் தோன்றும் போது , உங்கள் நிச்சயமற்ற இடங்களை அவருடைய ஆவி நிரப்பும்.
இதோ, அவருடைய வாக்குத்தத்தங்கள்: ஆண்டவரைத் தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள். அவர் உங்களுக்குத் தூரமானவர் அல்ல; நீங்கள் அவரைத் தேடி கண்டுபிடிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். நீங்கள் தட்டுங்கள், அவர் கதவைத் திறப்பார்..... ஏனெனில், உன் ஒவ்வொரு கதவையும், உன் எதிர்காலத்திற்கான கதவையும் கூட திறக்கக் கூடிய திறவுகோல்தான் ஜெபமாகும்.
ஆம்! ஆண்டவர் உங்களுக்கென்று வைத்திருக்கிற திட்டத்தை அறிவார். அவர் ஜெயம் மற்றும் சமாதானத்திற்கான எதிர்காலத்தை உங்களுக்கு உருவாக்கியிருக்கிறார். அவருக்கு அருகில் நெருங்கி வாருங்கள்; அவர் உங்களுக்கு அருகில் வருவார். நீங்கள் உங்கள் பகுதியை செய்யுங்கள், அவர் உங்களுக்கென்று வாக்களித்ததை செய்து முடிப்பார். இது மிகவும் அசாதாரணமானது!
உங்கள் எதிர்காலத்திற்கான கதவு உட்பட ஒவ்வொரு கதவையும் திறக்கும் திறவுகோல்தான் ஜெபம்!
இந்த வாசிப்பின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை பெறுவதற்கு இங்கே இலவசமாக பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
O tomto plánu

இந்த திட்டத்தில் எரேமியா 29:11ல் உள்ள வசனத்தை நாம் ஆழமாக தியானிக்க துவங்குவோம். வேதாகமத்திலேயே நான் மிகவும் நேசிக்கும் ஒரு வசனம் தான் இது. "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்; "அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." ஒவ்வொரு நாளும் நம்முடைய விசுவாசத்தில் நாம் இன்னும் அதிகமாக வளர, இந்த வசனத்தின் ஒவ்வொரு பகுதியையும் விரிவாகப் படித்து அதிலிருந்து போதனைகள் மற்றும் விதிமுறைகளைப் பெற்றுக்கொள்வோம்.
More
Podobné plány

Zkus se modlit

Milost ve vašem příběhu

Sedmidenní vánoční rozjímání

Co je mým účelem? Nauč se milovat Boha a milovat druhé lidi

Svoboda

Radujme se

Porazit sebevědomí a úzkost

Ester: Pro chvíli, jako je tato

Zůstávejme v Ježíši: Přinášejme trvalé ovoce (Love God Greatly/Miluj Boha nesmírně)
