இயேசு – உலகத்தின் ஒளிMostra

வழிநடத்தும் ஒளி
அந்த ஓட்டல் அருமையாக இருந்தது. ஆனால் இருட்டாயிருந்தது. ஒவ்வொரு மேஜையிலும் ஒரேயொரு மெழுகுவர்த்தி மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அங்கேயிருந்த உணவுபட்டியல்களை பார்த்து உணவை ஆர்டர் செய்வதற்கும், தன்னோடு உணவருந்த வந்தவர்களின் முகங்களை அடையாளம் காண்பதற்கும்;, தங்களுடைய உணவை பார்த்து உண்ணுவதற்கும் தங்கள் மொபைல் போனிலிருந்த வெளிச்சத்தை மக்கள் பயன்படுத்தவேண்டியதாயிருந்தது. கடைசியாக, ஒருவர் தன்னுடைய நாற்காலியை நகர்த்திக்கொண்டு அங்கிருந்த பணியாளரிடம், “நீங்கள் சற்று மின் விளக்குகளை இயக்க முடியுமா?” என்று கேட்டார். விளக்குகளை இயக்கிய மாத்திரத்தில், மக்கள் சிரிப்பொலிகளுடன் மகிழ்ச்சியடைந்தனர். அதற்கு பின்பு மகிழ்ச்சியோடு மற்றவர்களுடன் பேச ஆரம்பித்தனர். நன்றிகளை பகிர்ந்தனர். என்னுடைய சிநேகிதியின் கணவர் தன்னுடைய மொபைலை அணைத்துவிட்டு, தன்னுடைய தட்டை கையில் எடுத்துக்கொண்டு, “வெளிச்சம் உண்டாகக்கடவது! நாம் இப்போது சாப்பிடுவோம்” என்று எங்களிடம் கூறினார்.
எங்களுடைய மங்கிய மாலைப்பொழுது, ஸ்விட்சை போட்ட மாத்திரத்தில் ஒளிரும் பண்டிகையாய் மாறியது. ஆனால் மெய்யான ஒளி எங்கிருந்து வருகிறது என்பதை நாம் கண்டறிவது எந்த அளவுக்கு முக்கியமானது. தேவன் உலகத்தை உண்டாக்கிய முதலாம் நாளில், “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்றார், வெளிச்சம் உண்டானது (ஆதியாகமம் 1:3). பின்பு அந்த “வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்” (வச. 4).
வெளிச்சம் என்பது நம் மீதான தேவனுடைய அன்பை பிரதிபலிக்கிறது. அவருடைய வெளிச்சமானது இருளின் ஆதிக்கத்திலிருந்து நம்மை காப்பாற்றும் உலகத்தின் ஒளியான (யோவான் 8:12) இயேசுவைக் குறிக்கிறது. அவருடைய ஒளியில் நடக்கும்போது, குமாரனை மகிமைப்படுத்தும் பிரகாசமான பாதையில் நாம் நடக்கக்கூடும். அவரே உலகத்தின் பிரகாசமான பரிசு. அவருடைய ஒளி பிரகாசிக்கும்போது, அந்த வெளிச்சத்தின் பாதையில் நாமும் நடப்போம்.
உங்கள் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையில் கிறிஸ்துவின் ஒளி பிரகாசிக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அவருடைய ஒளி உங்களை எப்போது வழிநடத்தியது?
அன்பான தேவனே, உலகத்தின் ஒளியும் அன்பின் வழிநடத்தும் ஒளியுமான இயேசுவுக்காய் உமக்கு நன்றி.
Escriptures
Sobre aquest pla

கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தம் நமக்குள்ள இருளை உணர்ந்து கொள்வதில் ஆரம்பிக்கிறது. அந்த இருளுக்கு ஒளியேற்றும் இயேசு கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டாடுகிறது. அவருடைய ஒளியின் பிரசன்னத்தில் நாம் ஒருநாள் விடுவிக்கப்படுவோம் என்பது நம்முடைய ஊக்கம் ஆகிறது, கிறிஸ்துவின் மேல் நம்பிக்கைகிறது. இந்த விடுமுறை காலத்தில் அந்த பிரகாசமான ஒளியின் மீது கவனம் செலுத்துவோம். நமது அனுதின மன்னா இந்த பத்து பிரதிபலிப்புகளால் இந்த கிறிஸ்துமஸில் உங்கள் வாழ்வில் இயேசு கிறிஸ்துவின் ஒளியேற்றும் வழிகளை திறக்கிறது .
More