1
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:30-31
பரிசுத்த பைபிள்
TAERV
ஆனால், தண்ணீரின் மேல் நடந்து சென்றபொழுது பேதுரு காற்றடிப்பதையும் அலைகள் வீசுவதையும் கண்டான். பயந்து போன பேதுரு, நீரில் மூழ்க ஆரம்பித்தான். உடனே பேதுரு, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று அலறினான். உடனே இயேசு தமது கையால் பேதுருவைப் பற்றிக்கொண்டார். இயேசு அவனிடம், “உன் விசுவாசம் சிறியது. நீ ஏன் சந்தேகம் கொண்டாய்?” என்று சொன்னார்.
Compara
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:30-31
2
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:30
ஆனால், தண்ணீரின் மேல் நடந்து சென்றபொழுது பேதுரு காற்றடிப்பதையும் அலைகள் வீசுவதையும் கண்டான். பயந்து போன பேதுரு, நீரில் மூழ்க ஆரம்பித்தான். உடனே பேதுரு, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று அலறினான்.
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:30
3
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:27
உடனே இயேசு அவர்களிடம், “கவலை கொள்ளாதீர்கள். நான்தான்! பயப்படாதீர்கள்” என்று கூறினார்.
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:27
4
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:28-29
அதற்குப் பேதுரு, “ஆண்டவரே, மெய்யாகவே இது நீர்தானென்றால், என்னை உம்மிடம் தண்ணீரின் மேல் நடந்துவரக் கட்டளையிடும்” என்று சொன்னான். இயேசு அவனிடம், “வா, பேதுரு” என்று கூறினார். பின்னர், பேதுரு படகிலிருந்து இறங்கி, தண்ணீரின் மேல் இயேசுவை நோக்கி நடந்தான்.
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:28-29
5
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:33
அதன் பிறகு படகிலிருந்த சீஷர்கள் இயேசுவை வணங்கி, “உண்மையிலேயே நீர் தேவகுமாரன்தான்” என்று சொன்னார்கள்.
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:33
6
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:16-17
இயேசு, “மக்கள் திரும்பிச் செல்லவேண்டியத் தேவையில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்” என்று பதிலளித்தார். அதற்குச் சீஷர்கள், “ஆனால், நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தானே உள்ளன” என்று பதில் சொன்னார்கள்.
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:16-17
7
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:18-19
“அப்பத்தையும் மீனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று இயேசு கூறினார். பிறகு, அங்கிருந்த மக்களை இயேசு புல்வெளியில் அமரச் சொன்னார். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கையிலெடுத்துக் கொண்டார். இயேசு வானத்தைப் பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களைச் சீஷர்களிடம் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:18-19
8
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:20
மக்கள் அனைவரும் திருப்தியாக உண்டார்கள். மக்கள் உண்டது போக எஞ்சிய உணவைப் பன்னிரெண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 14:20