YouVersion 標識
搜索圖示

The Chosen - தமிழில் (பாகம் 3)預覽

The Chosen - தமிழில் (பாகம் 3)

5天中的第5天

ஆதியிலே நான் இருந்தேன்...

என் சகோதரன் யாக்கோபு ஏற்கனவே உனக்கு சொல்லியிருப்பான் என்று நம்புகிறேன், எங்களுடைய புத்தியின்மையால், "இடிமுழக்க மக்கள்" என்ற பெயரை எப்படி சம்பாதித்தோம் என்று. சில சமயங்களில் நாங்கள் உண்மையிலேயே உத்வேகமாக நடந்துகொண்டோம்!

என்னை மிகவும் தொட்ட ஒரு விஷயம் என்னவென்றால், ஊழியத்தில் நம்மை ஈடுபடுத்துவதற்கு முன்பு நாம் பரிபூரணமாவதற்கு அவர் ஒருபோதும் காத்திருப்பதில்லை என்பதை இயேசுவின் உறவிலிந்து கண்டு கொண்டேன். அப்படி இருந்திருந்தால், அவர் நித்தியத்திற்கும் அல்லது அதற்க்கும் சிறிது மேலாக காத்திருக்க வேண்டியிருந்திருக்கும் :-)

எங்களுள் மாற்றிக்கொள்ள வேண்டிய காரியங்கள், தவறுகள் பல இருந்திருந்தாலும் இயேசு தாம் செய்த எல்லாவற்றிலும் ஆரம்பத்திலிருந்தே எங்களையும் சேர்த்துக்கொண்டார்.

ஆயினும், இயேசு எங்கள் மீது கோபமடைந்து, "இடிமுழக்க மக்கள்" என்று பெயரிட்ட அதே நாளில்தான், அவர் என்னை அழைத்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அப்போதுதான் ஒரு சமாரிய ஜெப ஆலயத்தை சென்றடைந்திருந்தோம். இயேசு அங்கே நற்செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டிருந்தார். அன்றைய வாசிப்பை என்னுடன் சேர்ந்து தேர்ந்தெடுப்பதற்கு இயேசு என்னை அழைத்தார்.

அவர் என்னிடம் கேட்டபோது, ​​எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னுடைய தவறுகளை நான் அறிந்திருந்தேன், வெளிப்படையாக, வேதத்தின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுப்பது எளிமையானதாகத் தோன்றினாலும், முடிவெடுக்கும் அளவுக்கு நான் தகுதியானவனாக உணரவில்லை. ஆனால் இயேசு எப்போதும்போல என்மீது உண்மையான அக்கறை காட்டினார். அவர் என்ன செய்கிறார் என்பதை நான் அறிய என்னை அவர்பக்கம் கொண்டுவர விரும்பினார்.

ஆதியிலே தேவன் தமது வார்த்தையின் மூலம் எல்லாவற்றையும் எப்படி படைத்தார் என்பதைப் பற்றி சிந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரிடம் இப்படிச் சொன்னபோது, ​​இயேசு என் யோசனையைப் பயன்படுத்தி ஆதியாகமத்தின் தொடக்க வசனங்களையே வாசிப்புக்கு அடிப்படையாக எடுத்துக் கொண்டார்.

அந்த நேரத்தில் நான் அதிகம் அறிந்திருக்கவில்லை, அந்த தருணம் என் வாழ்க்கையில் நான் கற்பனை செய்ததை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறதென்று. நான் என்ன சிந்திக்கிறேன் என்பதில் ஆர்வமாக இருந்த தேவனோடு இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி என் இதயம் பூரித்தது!

சில வருடங்களுக்குப் பிறகு, என்னுடைய சுவிசேஷமாகிய, யோவான் சுவிசேஷத்தை எழுதும் பணியை நான் பெற்றபோது, ​​அதை எப்படித் தொடங்குவது என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவரது ஊக்கம் என்னை மீண்டும் ஆரம்பத்திற்கு இட்டுச் சென்றதை என்னால் உணர முடிந்தது, "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." (யோவான் 1:1)

அவரே ஆரம்பமும் முடிவும். அவரே வார்த்தையானவர். நான் அவருடைய நண்பன் மற்றும் ஊழியக்காரன்.

என் பெயர் யோவான், செபதேயுவின் மகன், நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்பான நண்பரே, நீங்கள் பலமுறை தோல்வியடைந்துவிட்டீர்கள் என்றும், தேவனைச் சேவிக்க உங்களுக்குத் தகுதி இல்லை என்றும் நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது உண்மையல்ல. அவர் தனது ஒளியைப் பரப்பவும், உங்கள் மூலம் பிறரது வாழ்க்கையை மாற்றவும் விரும்புகிறார். இந்த காலம், உண்மையில், பலரை ஆசீர்வதிக்க திறந்த கதவுகளின் நேரம். நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்: "ஆண்டவரே, இந்த அன்பருக்காக நான் ஜெபிக்கிறேன், இவர் தனது வாழ்க்கைக்கான உமது நோக்கங்களை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ளட்டும். இவர் வாழ்வின் மீது இருக்கும் எந்தவொரு குற்றச்சாட்டும் ஆக்கினைத்தீர்ப்பும் முற்றிலுமாக நிர்மூலமாகட்டும். இந்த அன்பர் உம்முடன் வைத்திருக்கும் உறவினால் அவர் எப்போதும் உம்முடைய ஒளியினால் பிரகாசிக்கட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

நீ ஒரு அற்புதமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாய்!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

關於此計劃

The Chosen - தமிழில் (பாகம் 3)

“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch

More