உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்预览

உன் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்...
ஒப்புரவாகுதலின் பாதையில் தொடர்ந்து செல்லும் வேளையில், நீ சந்திக்கும் முரண்பாடுகள் பற்றிய உன் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி, நான் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்.
கஷ்டங்களைப் பற்றி வேதாகமம் நமக்கு என்ன சொல்கிறது என்பதை இங்கே காணலாம்:
“அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது." (ரோமர் 5:3-5)
நீ கஷ்டப்படுவதையோ அல்லது துன்பப்படுவதையோ உன் பிதாவின் இருதயம் பார்க்க விரும்புவதில்லை. ஆனால் விஷயங்கள் கடினமாக இருக்கும்போது, அவற்றிலிருந்து நீ வெளியே வந்து அவருடைய இருதயத்திற்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். ஆண்டவருடைய அன்பு உன் இருதயத்தில் ஊற்றப்பட்டுள்ளது. எனவே நீ பொறுமையுடன் காத்திரு.
அதுமட்டுமின்றி, நேசிக்க முடியாதவர்களை நேசிப்பது ஆண்டவரில் மென்மேலும் வளர உனக்கு உதவுகிறது. நீ நம்புவதற்கு ஏதுவான சாதகமான சூழ்நிலை உனக்கு இல்லையென்றாலும், சகலத்தையும் செய்து முடிக்கும் ஒரே மெய்யான தேவனின் உறவில் அது நிலைத்திருக்கிறது!
இன்று, உன்னைப் பலப்படுத்தக்கூடிய ஆண்டவர் மீது உன் கண்களை நிலைநிறுத்திக்கொள்! நீ தனியாக இல்லை, நீ என்றென்றும் ஜீவித்திருக்கிற ஆண்டவருடைய பிள்ளை! நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து முன்னேறு.
இன்றே ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்!
读经计划介绍

சண்டை சச்சரவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன; அதற்காக, கசப்பான மற்றும் முறிந்த உறவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. ஆனாலும் மற்றவர்களுடனான நமது உறவை நாம் சரிசெய்து குணப்படுத்துவதற்கு முன்பு, ஆண்டவருடனான நமது உறவை அவர் குணப்படுத்த நாம் இடங்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், ஒப்புரவு என்ற அற்புதத்தை இயேசு எவ்வாறு செய்கிறார் என்பதைப் பார்க்க உங்களை அழைக்கிறோம். மனந்திரும்புதல், பரிகாரம் மற்றும் மன்னிப்பு ஆகிய அடிப்படைக் காரியங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் சண்டை சச்சரவை சமாளிப்பதைத் தாண்டி விடுதலை மற்றும் குணமடைதலுக்குக் கடந்து செல்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்தத் திட்டத்தின் மூலம் உறவில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கண்டறிவது என்பதைப் புரிந்துகொண்டு, நல்ல தீர்வுகளைக் கண்டறிந்து, மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகிய செயல்முறைகளின் வாயிலாக உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுவீர்கள்.
More