உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்预览

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

7天中的第3天

ஒப்புரவாக்குதலுக்கு ஆதாரமாக நீ இருக்கலாமே!

இன்று, ஒப்புரவாகுதலில் பிரவேசிப்பதற்கான மற்றொரு திறவுகோலைப் பற்றி நாம் ஆராய்ந்து அறியலாம்.

சில நேரங்களில், நீ முரண்படும் நிலையில் இல்லாமல், முரண்பாட்டைத் தீர்க்க வேறொருவருக்கு உதவக்கூடிய நிலையில் நீ இருப்பதாக உணர்கிறாயா? அப்படியானால், ஆண்டவர் உனக்கு உதவ விரும்புகிறார்! நீ ஒப்புரவாக்குதலின் ஆதாரமாகவும், நல்ல ஆலோசகராகவும் மாறலாம்.

ஒரு நாள், ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம் அவர்களின் மிகக் கொடூரமான பாவத்தை, அவர்கள் செய்த மிகமோசமான, மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை ஒரு காகிதத்தில் எழுதச் சொன்னார். பின்னர், அவர்கள் அதிக விவரங்களைச் சொல்வதற்கு முன்பு, அவர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்: இந்த ரகசியத்தை நீ யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றால், நீ யாரைத் தேர்ந்தெடுப்பாய்? அந்த நபருக்கு என்ன மாதிரியான தரங்கள் இருக்க வேண்டும்?

அவர்கள் பின்வரும் தரங்களை பதிலாகக் கூறினர்:

  • தயை
  • ரகசியம் காக்கும் திறன்
  • அன்பு
  • இரக்கம்

நீ ஒப்புரவாக்குதலின் ஆதாரமாக விளங்கலாம்.

நீ பயப்பட வேண்டியதில்லை. முரண்பாடுகள் வாழ்வில் வரலாம், ஆனால் அவைகள் நிலைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால், அவற்றை மேற்கொள்வதற்கான திறவுகோள்கள் அனைத்தையும் ஆண்டவர் உனக்குக் கொடுத்துள்ளதால், அவைகள் உன் வாழ்வில் தலை தூக்காது. நீ அவருக்கு இடமளித்தால், அவருடைய அன்பு இறுதிவரை உன்னிடத்தில் விளங்கும். முரண்பாடுகளை சரிசெய்வதற்கான சரியான அணுகுமுறையைப் பெற தேவ ஆவியானவர் உனக்கு உதவுவார்.

வேதாகமம் சொல்கிறது, “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." (கலாத்தியர் 5:22-23)

என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்... “ஆண்டவரே, நான் சமாதானம்பண்ணும் நபராக, ஒப்புரவாகுதலுக்கு மனமுவந்து முன்வருபவராக இருக்க விரும்புகிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் சந்திக்கும்போது, எனக்குத் தேவையான வார்த்தைகளையும் செயல்முறையையும் பெற எனக்கு உதவும். அந்த நேரத்தில் உம்முடைய ஞானத்தையும், அன்பையும், இயற்கைக்கு அப்பாற்பட்ட புரிதலையும் அருள வேண்டும் என்று மன்றாடுகிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

இன்று நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக!

读经计划介绍

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்

சண்டை சச்சரவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன; அதற்காக, கசப்பான மற்றும் முறிந்த உறவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. ஆனாலும் மற்றவர்களுடனான நமது உறவை நாம் சரிசெய்து குணப்படுத்துவதற்கு முன்பு, ஆண்டவருடனான நமது உறவை அவர் குணப்படுத்த நாம் இடங்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், ஒப்புரவு என்ற அற்புதத்தை இயேசு எவ்வாறு செய்கிறார் என்பதைப் பார்க்க உங்களை அழைக்கிறோம். மனந்திரும்புதல், பரிகாரம் மற்றும் மன்னிப்பு ஆகிய அடிப்படைக் காரியங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் சண்டை சச்சரவை சமாளிப்பதைத் தாண்டி விடுதலை மற்றும் குணமடைதலுக்குக் கடந்து செல்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்தத் திட்டத்தின் மூலம் உறவில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கண்டறிவது என்பதைப் புரிந்துகொண்டு, நல்ல தீர்வுகளைக் கண்டறிந்து, மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகிய செயல்முறைகளின் வாயிலாக உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுவீர்கள்.

More