மன்னிப்புCampione

மன்னிப்பது போதாது என்றால் என்ன செய்வது?
மன்னிக்கும் விஷயத்தில் எனது அனுபவங்களில் ஒன்றை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன், நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். எங்கள் உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, கடந்த காலத்தில் என்னை மிகவும் புண்படுத்திய ஒருவரின் பெயரை அந்த தருணத்தில் என் நண்பர் குறிப்பிட்டார்.
திடீரென்று, நான் ஏற்கனவே இந்த நபரை என் இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னித்திருந்தாலும், ஒரு வகையான வெறுப்பு மீண்டும் எழுந்தது. எனக்கு எரிச்சல் வந்தது. எனக்கு கோபம் வந்தது, வெளிப்படையாக இல்லாவிட்டாலும், உள்ளுக்குள். நான் "பழிவாங்கும்" வழிக்கு மாற விரும்பினேன். ஆனால் ஆண்டவருடைய வார்த்தை மிகவும் தெளிவாக உள்ளது. ரோமர் 12:19ல் எழுதப்பட்டுள்ளது, "பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்." (ரோமர் 12:19)
ஆண்டவர் எனக்கு ஒரு முக்கியமான உண்மையைக் கற்றுக் கொடுத்தார். நாம் மன்னிக்க வேண்டும் மற்றும் "மீண்டும் மன்னிக்க வேண்டும்". இது ஒரு புதிய கோட்பா? இல்லவே இல்லை... இது இயேசு பேதுருவுக்குக் கொடுத்த போதனை.
இதை மத்தேயு 18:21-22ல் வாசிக்கிறோம்: "அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்." (மத்தேயு 18:21-22)
யாராவது நம்மை 490 முறை காயப்படுத்த முடியுமா? சாத்தியம்... ஆனால் அரிது! இந்த காயத்தின் நினைவு திரும்பும்போது, நாம் மீண்டுமீண்டுமாக மன்னிக்க வேண்டும் என்று இயேசு நமக்கு கற்பிக்கிறார் என்று நான் நம்புகிறேன். சுருக்கமாக, நாம் "மீண்டும் மன்னிக்க வேண்டும்."
மன்னிப்பு கொடுப்பதும், அதைத் தராமல் வைத்துக்கொள்வதும் ஒரு விருப்பம்... என்னை காயப்படுத்திய அந்த நபரைப் பற்றி நான் ஒரு தேர்வு செய்தேன். நான் மீண்டும் மன்னித்தேன், எனக்கு அவர் செய்த சில புதிய தவறுகளுக்காக அல்ல, முந்தைய தவறின் நினைவு என்னை காயப்படுத்தியதால்.
மன்னித்துவிடு, "மீண்டும் மன்னித்துவிடு". சொல்லப்போனால் நானும் உன்னைபோலதான். நானும் மன்னிக்க வேண்டும் மற்றும் "மீண்டும் மன்னிக்க வேண்டும்," எதுவானாலும் ஆண்டவரின் கிருபையால், இது சாத்தியம்!
Riguardo questo Piano

சில சமயங்களில் மன்னிப்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. மனுஷீகத்தில் மன்னிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவரின் உதவியோடு அது கூடும். மன்னிப்பின்மை நம் வாழ்வில் பல ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் வேதாகமத்தின் மூலம் மன்னிப்பைப் பற்றி ஆராய்வோம், கற்றுக்கொள்வோம்.
More
Piani Collegati

Genitore: Un Dono, Non Un Mestiere

Nel business con Dio: Fede, Visione E Azione

Dal Pozzo Alla Pienezza

Vivere Completi

Perché Parlare in Lingue

Consapevolezza E Riconoscimento

Quando Il Cuore Arde Gli Occhi Si Aprono

Tour Nel Deserto

EquipHer Vol. 28: "Come Riconoscere un’Opportunità Divina"
