யோவேல் 3
3
அத்தியாயம் 3
தேவன் தேசங்களை நியாயம்தீர்த்தல்
1இதோ, யூதாவிற்கும் எருசலேமிற்கும் ஏற்பட்டிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும், 2நான் எல்லா தேசத்தாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகச் செய்வேன், அவர்கள் என் மக்களையும் இஸ்ரவேலென்னும் என் பங்கையும் அந்நியமக்களுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினால், 3அவர்கள் என் மக்கள்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை விபச்சாரிகளுக்கு விலையாகக் கொடுத்து, மதுபானம் குடிப்பதற்காக பெண் குழந்தைகளைத் திராட்சைரசத்திற்கு விலையாகக் கொடுத்ததினாலும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன். 4தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் அனைத்து எல்லைகளே, உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச் சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச் சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமில்லாமல் மிகவேகமாக நீங்கள் சரிகட்டுகிறதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படிச் செய்வேன். 5நீங்கள் என்னுடைய வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, இன்பமும் உயர்ந்ததுமான என் பொருட்களை உங்கள் கோவில்களிலே கொண்டுபோய், 6யூதாவின் மக்களையும் எருசலேமின் மக்களையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள். 7இதோ, நீங்கள் அவர்களை விற்றுப்போட்ட அவ்விடத்திலிருந்து நான் அவர்களை எழும்பிவரச்செய்து, நீங்கள் சரிக்கட்டினதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்து, 8உங்கள் மகன்களையும், மகள்களையும் யூதா மக்களின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தார்களாகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; யெகோவா இதைச் சொன்னார். 9இதை அந்நியமக்களுக்குள்ளே அறிவியுங்கள்; போருக்கு ஆயத்தம்செய்யுங்கள்; பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; போர்வீரர்கள் எல்லோரும் சேர்ந்து ஏறிவரட்டும். 10உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக. 11சகல மக்களே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஒன்றாக வந்து கூடுங்கள்; யெகோவாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கிவரச்செய்வீராக. 12மக்கள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்கிற்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள மக்களை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன். 13பயிர் முற்றியது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய ஒழுக்கக்கேடு பெரியது. 14நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே மக்கள் திரள்திரளாக இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே யெகோவாவின் நாள் சமீபமாயிருக்கிறது. 15சூரியனும், சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமங்கும். 16யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் யெகோவா தமது மக்களுக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் மக்களுக்கு பாதுகாப்பான கோட்டையுமாக இருப்பார். 17என் பரிசுத்த மலையாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாக இருக்கும்; அந்நியர்கள் இனி அதைக் கடந்துபோவதில்லை.
தம்முடைய பிள்ளைகளை தேவன் ஆசீர்வதித்தல்
18அக்காலத்தில் மலைகள் திராட்சைரசத்தைப் பொழியும், மலைகள் பாலாக ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் கரைபுரண்டு ஓடும்; ஒரு ஊற்று யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும். 19யூதா மக்களின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையின் காரணமாக எகிப்து பாழாய்ப்போகும், ஏதோம் பாழான வனாந்திரமாகும். 20ஆனால் யூதாவோ நீண்டகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும். 21நான் தண்டிக்காமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியை தண்டிக்காமல்#3:21 தண்டிக்காமல் விட்டவர்களை நான் மன்னிப்பேன். விடமாட்டேன்; யெகோவா சீயோனிலே வாசமாயிருக்கிறார்.
S'ha seleccionat:
யோவேல் 3: IRVTam
Subratllat
Copia
Compara
Comparteix
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.