ஓசியா 1
1
அத்தியாயம் 1
1யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் மகனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் மகனாகிய ஓசியாவிற்கு கிடைத்த யெகோவாவுடைய வசனம்.
ஓசியாவின் மனைவியும் பிள்ளைகளும்
2யெகோவா ஓசியாவைக்கொண்டு சொல்லத் தொடங்கினபோது, யெகோவா ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு விபச்சாரியையும் அவளுடைய பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் யெகோவாவைவிட்டு விலகி கெட்டுப்போனது என்றார். 3அவன் போய், திப்லாயிமின் மகளாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பமடைந்து, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். 4அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல்#1:4 இந்த எஸ்ரயேல்-அர்த்தம்-தேவன் விதைப்பார்/ சிதறடிப்பார்/, இது ஒரு பட்டணம், இங்கே இஸ்ரவேலின் ராஜா குடும்பத்தாரையெல்லாம் யெகூ கொன்றுப் போட்டான். பிறகு ராஜாவானான். 2. ராஜா 9-10. அதிகாரங்கள்-பார்க்கவும் என்னும் பெயரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் யெகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவருவேன். 5அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார். 6அவள் மறுபடியும் கர்ப்பமடைந்து, ஒரு மகளைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பெயரிடு; ஏனெனில், நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கம் செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன். 7யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கம் செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், போரினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரர்களினாலும் நான் அவர்களை காப்பாற்றாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை காப்பாற்றுவேன் என்றார். 8அவள் லோருகாமாவை#1:8 இரக்கம் பெறாதவள் பால்மறக்கச்செய்தபிறகு, கர்ப்பமடைந்து ஒரு மகனைப் பெற்றாள். 9அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ#1:9 என் ஜனமல்ல என்னும் பெயரிடு; ஏனெனில் நீங்கள் என் மக்களும் அல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதுமில்லை. 10என்றாலும், இஸ்ரவேல் மக்களின் தொகையை அளக்கவும் எண்ணமுடியாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் மக்களல்ல என்று அவர்களுக்குச் சொல்லுவதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும். 11அப்பொழுது யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் ஒன்றாகக் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு#1:11 மறுபடியும் தம் மக்களை நாட்டுவார். வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாக இருக்கும்.
S'ha seleccionat:
ஓசியா 1: IRVTam
Subratllat
Copia
Compara
Comparteix
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.