YouVersion 標識
搜索圖示

மத்தேயு 1

1
இயேசுவின் வம்ச வரலாறு
1ஆபிரகாமின் மகனான, தாவீதின் மகன் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின் பெயர் அட்டவணை:
2ஆபிரகாம், ஈசாக்கின் தந்தை.
ஈசாக்கு, யாக்கோபின் தந்தை.
யாக்கோபு, யூதாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தந்தை.
3யூதா, பாரேஸ் மற்றும் சாராவின் தந்தை. அவர்களின் தாய் தாமார்.
பாரேஸ், எஸ்ரோமின் தந்தை.
எஸ்ரோம், ஆராமின் தந்தை.
4ஆராம், அம்மினதாபின் தந்தை.
அம்மினதாப், நகசோனின் தந்தை.
நகசோன், சல்மோனின் தந்தை.
5சல்மோன், போவாஸின் தந்தை. போவாஸின் தாய் ராகாப்.
போவாஸ், ஓபேத்தின் தந்தை. ஓபேத்தின் தாய் ரூத்,
ஓபேத், ஈசாயின் தந்தை.
6ஈசாய், தாவீது அரசனின் தந்தை.
தாவீது, சாலொமோனின் தந்தை. சாலொமோனுடைய தாய் உரியாவின் மனைவி.
7சாலொமோன், ரெகொபெயாமின் தந்தை.
ரெகொபெயாம், அபியாவின் தந்தை.
அபியா, ஆஷாவின் தந்தை.
8ஆஷா, யோசபாத்தின் தந்தை.
யோசபாத், யோராமின் தந்தை.
யோராம், உசியாவின் தந்தை.
9உசியா, யோதாமின் தந்தை.
யோதாம், ஆகாஸின் தந்தை.
ஆகாஸ், எசேக்கியாவின் தந்தை.
10எசேக்கியா, மனாசேயின் தந்தை.
மனாசே, ஆமோனின் தந்தை.
ஆமோன், யோசியாவின் தந்தை.
11யோசியா, எகோனியாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தந்தை. அக்காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.
12பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட பின்:
எகோனியா, சலாத்தியேலின் தந்தை.
சலாத்தியேல், சொரொபாபேலின் தந்தை.
13சொரொபாபேல், அபியூத்தின் தந்தை.
அபியூத், எலியாக்கீமின் தந்தை.
எலியாக்கீம், ஆசோரின் தந்தை.
14ஆசோர், சாதோக்கின் தந்தை.
சாதோக், ஆகீமின் தந்தை.
ஆகீம், எலியூத்தின் தந்தை.
15எலியூத், எலியேசரின் தந்தை.
எலியேசர், மாத்தானின் தந்தை.
மாத்தான், யாக்கோபின் தந்தை.
16யாக்கோபு, யோசேப்பின் தந்தை. யோசேப்பு, மரியாளின் கணவன். மரியாளிடம் கிறிஸ்து#1:16 கிறிஸ்து – அல்லது மேசியா. இச் சொற்களின் அர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்டவர். எனப்படுகின்ற இயேசு பிறந்தார்.
17இவ்வாறு ஆபிரகாமிலிருந்து தாவீது வரை பதினான்கு தலைமுறைகளும், தாவீதிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும் வரை பதினான்கு தலைமுறைகளும், நாடு கடத்தப்பட்டதிலிருந்து கிறிஸ்து வரையிலும், பதினான்கு தலைமுறைகளும் இருந்தன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு
18இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இவ்வாறு நிகழ்ந்தது: அவரது தாய் மரியாள், யோசேப்பைத் திருமணம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தாள். ஆனால் அவர்கள் ஒன்றுசேரும் முன்பே, அவள் பரிசுத்த ஆவியானவரினால் உருவான ஒரு குழந்தையைச் சுமக்கிறாள் எனத் தெரியவந்தது. 19அவளைத் திருமணம் செய்யவிருந்த#1:19 அவளைத் திருமணம் செய்யவிருந்த – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. மூலமொழியில் அவளது கணவன் என்றுள்ளது. யோசேப்பு, நீதிமானாயிருந்தார். ஆனாலும் அவளை மக்கள் முன் பகிரங்கமாக அவமானப்படுத்த விரும்பாமல், திருமண ஒப்பந்தத்தை இரகசியமாக ரத்துச் செய்ய நினைத்தார்.
20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, இதோ! கர்த்தரின் தூதன் அவருக்குக் கனவில் தோன்றி, “தாவீதின் மகனே, யோசேப்பே, நீ மரியாளை உனது மனைவியாக வீட்டுக்கு அழைத்துச் செல்வதைக் குறித்துப் பயப்படாதே; ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியானவரினால் உருவான ஒரு குழந்தையைச் சுமக்கிறாள். 21அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; நீ அவருக்கு ‘இயேசு’#1:21 இயேசு – இதன் பொருள் இரட்சகர். என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களது பாவங்களிலிருந்து இரட்சிப்பார்” என்றான்.
22கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாய் சொல்லியிருந்தது நிறைவேறவே இவை நடந்தன: 23“ஒரு கன்னிப்பெண் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவரை ‘இம்மானுவேல்’ என அழைப்பார்கள்.”#1:23 ஏசா. 7:14 இம்மானுவேல் என்பதன் அர்த்தம், இறைவன் நம்முடன் இருக்கின்றார் என்பதே.
24யோசேப்பு தூக்கம் கலைந்து எழுந்ததும், கர்த்தரின் தூதன் தனக்குக் கட்டளையிட்டபடி செய்தார். அவர் மரியாளைத் தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார், 25ஆனாலும் அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளுடன் தாம்பத்திய உறவுகொள்ளவில்லை. யோசேப்பு, பிள்ளைக்கு#1:25 பிள்ளைக்கு – மூலமொழியில் அதற்கு. இயேசு எனப் பெயர் சூட்டினார்.

醒目顯示

分享

複製

None

想要在所有設備上保存你的醒目顯示嗎? 註冊或登入