தாவீதின் சங்கீதங்கள் 预览

தாவீதின் சங்கீதங்கள்

73天中的第4天

எதுவரைக்கும்?

ஆண்ட்ரு முர்ரே என்னும் சிறந்த ஆன்மீக எழுத்தாளர் கடவுளுக்குக் காத்திருத்தல் பற்றி இவ்வாறு எழுதுகிறார், “பொறுமையை வளர்த்துக்கொள்ள சிறந்த இடம் கடவுளுக்காகக் காத்திருப்பது தான். அங்கே தான் நாம் எத்தனை அவசரக்காரர்கள் என்பதையும், நமது பொறுமையின்மைக்கு அர்த்தம் என்ன என்பதையும் கண்டுபிடிக்கிறோம். நமக்குத் தடையாக இருக்கும் மனிதர்கள், சூழ்நிலைகள், நம் மேலேயே, அல்லது மிகவும் மெதுவாக நடக்கும் நமது ஆன்மீக வளர்ச்சியின் மேல் பொறுமை இழந்து போவதாகச் சொல்லிக் கொள்கிறோம். உண்மையிலேயே நாம் கடவுளின் சந்நிதியில் காத்திருந்தால், நாம் கடவுளிடம் தான் பொறுமை இல்லாதவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் கண்டுகொள்வோம். அவர் உடனடியாகவோ, சீக்கிரமாகவோ நமக்குப் பதில் செய்யவில்லை என்று அவர் மேல் பொறுமை இழந்து இருக்கிறோம். நாம் கடவுளுக்காகக் காத்திருக்கும் போது தான் நமது கண்கள் கடவுளின் ஞானத்தையும் அவரது சர்வவல்ல சித்தத்தையும் விசுவாசிப்பதற்குத் திறக்கின்றன. மேலும் எவ்வளவு விரைவாகவும் முழுமையாகவும் அவரது ஞானத்துக்கும் சித்தத்துக்கும் நம்மை விட்டுக் கொடுக்கிறோமோ அவ்வளவு நிச்சயமாக அவரது ஆசீர்வாதங்கள் நமக்கு வந்து சேரும் என்பதையும் நாம் கண்டுகொள்வோம்.”

நாம் கடவுளிடம் அவசரப்படாமல் பொறுமையாகக் காத்திருக்கும் போது அவரது ஆசீர்வாதங்கள் நிச்சயமாக நமக்கு உண்டு. எதுவரைக்கும் ஆண்டவரே என்று கேட்கிற தாவீது கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார் என்று இந்த சங்கீதத்தின் முடிவில் சொல்கிறார். பொறுமையாகக் காத்திருக்காமல் போயிருந்தால் கடவுள் நமது அழுகையின் சத்தத்தைக் கேட்கும் பாக்கியத்தை நாம் இழந்துவிடுவோம். 

சிந்தனை : நமது ஜெபத்தில் அவசரமும் எதுவரைக்கும் என்ற கேள்விகளும் இருக்கலாம் ஆனால் பொறுமையில்லாமல் பாதியில் கடவுளை விட்டுப் போவது மட்டும் கூடாது. 

ஜெபம் : என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.

读经计划介绍

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More