இவைகளில் அன்பே பிரதானம்预览

இவைகளில் அன்பே பிரதானம்

26天中的第19天

உங்கள் பிள்ளைகள் அன்பில் வாழவேண்டும், பிரயோஜனமுள்ளவர்களாக இருக்க வேண்டும், போதை மற்றும் பலவித தீமையான பழக்கங்களுக்கு அடிமையாகி உங்களுக்கு வலியும், வேதனையும் உண்டாக்கக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், தேவையற்ற காரியங்களில் இருந்து விடுபட்டு, உங்கள் பிள்ளைகளுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள்.

அதேபோல் பிள்ளைகளும், பெற்றோரின் பாசத்தையும், கவனிப்பையும் மனம்விட்டு பாராட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் அனைவரும் தரமான நேரத்தை நம்முடைய பரலோகப் பிதாவை துதித்து, போற்றி, புகழ்ந்துபாட ஒதுக்கவேண்டும். 119ம் சங்கீதத்தில் சங்கீதக்காரன் சொல்வதுபோல நாமும் நமது பரம தகப்பனையும் அவருடைய வார்த்தையையும் எந்த அளவுக்கு நேசிக்கிறோம், எந்த அளவுக்கு வாஞ்சிக்கிறோம் என்பதை அவரிடம் சொல்ல வேண்டும். 

சுவிசேஷகர் ஜிப்ஸி ஸ்மித் தன்னுடைய மகன்களின் ஒருவரைப் பற்றி இவ்வாறு சொல்வதுண்டு. ஒரு நாள் அவர் மிகவும் அலுவலாயிருந்தபோது அவருடைய மகன் ஒருவர் அவரிடம் வந்தார். விசேஷமான கத்தி ஒன்றை பயன்படுத்துவது எப்படி என்பதை தன் மகனுக்கு கற்றுக்கொடுக்க ஜிப்ஸி விரும்பியபோது, அவருடைய மகன் அதை நிராகரித்துவிட்டார். பல்வேறு காரியங்களை அவர் தன் மகனுக்கு கற்றுக்கொடுக்க முயன்றபோது, மகனுக்கு எதிலுமே விருப்பம் இல்லாததைக் கண்டார். கடைசியில், என்னசெய்வதென்று தெரியாமல் அவர் தன் மகனைப் பார்த்து, “உனக்கு என்னதான் வேண்டும்” என்றார். மகன், “அப்பா, எனக்கு நீங்கள்தான் வேண்டும்” என்றான்.

அன்பு சீக்கிரத்தில் சாகாது. அது உயிருள்ளது. புறக்கணிப்பு போன்ற சூழ்நிலை தவிர வாழ்க்கையில் மற்ற ஆபத்தான சூழ்நிலைகளிலும் அது தழைத்தோங்கும்.

எனவேதான் நான் எழுதினேன் : நாம் வசிக்கும் இடங்களில் ஏற்படும் கோபதாபங்களுக்கு தேவனுடைய அன்பு மட்டுமே மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல. 

读经计划介绍

இவைகளில் அன்பே பிரதானம்

கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார். 

More