1
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:24
பரிசுத்த பைபிள்
TAERV
பின்பு இயேசு தமது சீஷர்களிடம், “என்னைப் பின்தொடர விரும்பும் யாரும் தன் சுயவிருப்பங்களைத் துறக்க வேண்டும். தனக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்தொடர வேண்டும்.
Ṣe Àfiwé
Ṣàwárí மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:24
2
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:18
எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது.
Ṣàwárí மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:18
3
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:19
பரலோக இராஜ்யத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். நீ இப்பூலோகத்தில் வழங்கும் நியாயத்தீர்ப்பு, (மெய்யாகவே) தேவனின் நியாயத்தீர்ப்பாகும். இப்பூலோகத்தில் நீ வாக்களிக்கும் மன்னிப்பு, தேவனின் மன்னிப்பாகும்” என்று சொன்னார்.
Ṣàwárí மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:19
4
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:25
தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் எவனும் அதை இழப்பான். எனக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறவன், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.
Ṣàwárí மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:25
5
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:26
தன் ஆத்துமாவை இழந்தவனுக்கு, இவ்வுலகம் முழுவதும் கிடைத்தாலும் ஒரு பயனும் இல்லை. என்ன விலை கொடுத்தாலும் இழந்த ஆத்துமாவை மீட்க இயலாது.
Ṣàwárí மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:26
6
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:15-16
பின் இயேசு தம் சீஷர்களிடம், “நான் யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சீமோன் பேதுரு, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான்.
Ṣàwárí மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:15-16
7
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:17
இயேசு அவனிடம், “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார்.
Ṣàwárí மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:17