BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

இயேசுவும் அவருடைய சீஷர்கள் அனைவரும் சேர்ந்து மற்றொரு பந்தியைப் பகிர்ந்துகொள்வதில் லூக்காவின் சுவிஷேசம் முடிகிறது. அவரது உயிர்த்தெழுந்த உடலால் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அவர் இன்னும் ஒரு மனிதர் என்பதை அவர்கள் காண்கிறார்கள், ஆனால் அவர் பிதாவாகவும் இருக்கிறார். அவர் மரணத்தை கடந்து மற்றொரு பகுதிக்கு வந்து நடப்பது, பேசுவது, புதிய படைப்பின் ஒரு பகுதி. இந்த அற்புதமான செய்தியை இயேசு அவர்களுக்குச் சொல்கிறார். அவரைத் தாங்கிக் கொண்ட அதே தேவ வல்லமையை அவர் அவர்களுக்குக் கொடுக்கப் போகிறார், எனவே அவர்கள் வெளியே சென்று அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய சுவிஷேசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்குப் பிறகு, இயேசுவானவர் தேவனின் சிங்காசனம் இருப்பதாக யூதர்களால் புரிந்துகொள்ளப்பட்ட பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று லூக்கா சொல்கிறார். இயேசுவைப் பின்பற்றுபவர்கள் இயேசுவை துதிப்பதை நிறுத்த முடியாது. அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி, இயேசு வாக்குத்தத்தம் பண்ணிய தேவ வல்லமைக்காக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள். லூக்கா இந்த சம்பவத்தை தனது அடுத்த நிருபமான அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் தொடர்கிறார். இயேசுவின் சீஷர்கள் தேவனின் வல்லமையைப் பெற்று, சுவிஷேசத்தைஉலகுக்கு எடுத்துச் சென்றதன் சரித்திர சம்பவத்தை அவர் சொல்கிறார்.
Kutsal Yazı
Okuma Planı Hakkında

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More