BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Örnek

மரியாள் அவளுடைய பேறுகால முடிவில் இருக்கும்போது, அவளும் அவளது கணவனுமான யோசேப்பும், அகஸ்துராயனால் ஆணையிடப்பட்ட குடிமதிப்பு எழுத பெத்லகேமுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் வந்தடைகிறார்கள், மரியாள் பிரசவிக்க போகிறாள். அவர்களால் ஒரு விருந்தினர் அறையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, விலங்குகள் உறங்கும் கொட்டகையைத்தான் அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. இஸ்ரவேலின் வருங்கால ராஜாவை ஒரு தொழுவத்தில் பெற்றெடுக்கிறாள்.
கொஞ்சம் தூரத்தில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்த போது, திடீரென ஒரு தேவதூதன் அவர்கள் முன் தோன்றினான். இது, நிச்சயமாக அவர்களை முற்றிலுமாக ஆச்சரியப்படுத்தியது. ஆனால் தேவதூதன் ஒரு இரட்சகர் பிறந்ததால் அவர்களைக் கொண்டாடச் சொல்கிறான். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள் என்று அவர்களிடம் கூறப்படுகிறது. பூமியிலே சமாதானத்தைக் கொண்டுவந்த தேவனைப் பாடல் பாடி துதித்து தேவதூதர்களின் ஒரு பெரிய கூட்டம் கொண்டாட்டத்தைத் தொடங்குகின்றனர் மேய்ப்பர்கள் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் குழந்தையைத் தேடத் தொடங்கினர். தேவதூதன் சொன்னபடியே புதிதாகப் பிறந்த இயேசுவை அவர்கள் மாட்டுத் தொழுவத்தில் கண்டார்கள். அவர்கள் பிரமிப்படைந்தார்கள். அவர்கள் அனுபவித்ததைப் பிரசித்தம்பண்ணாமல் இருக்க முடியவில்லை, மேலும் அவர்களால் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
தேவன் வருவார் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்––ஒரு பருவ வயது பெண்ணுக்கு ஒரு மாட்டுதொழுவத்தில் குழந்தை பிறந்து பெயர் இல்லாத மேய்ப்பர்களால் கொண்டாடப்படுகிறது. லூக்காவின் சம்பவத்தில் எல்லாமே பின்னோக்கி உள்ளன, அதுதான் முக்கியம். இந்த விரும்ப படாத இடங்களில் தேவனின் ராஜ்யம் எவ்வாறு வந்து சேர்கிறது என்பதை அவர் காட்டுகிறார்––காத்திருப்போர், விதவைகள் மற்றும் ஏழைகள் மத்தியில்––நம் உலக ஒழுங்கை தலைகீழாக மாற்றுவதன் மூலம் இரட்சிப்பைக் கொண்டுவருவதற்காக இயேசு இங்கே இருக்கிறார்.
Kutsal Yazı
Okuma Planı Hakkında

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.
More