Bible App logo
Icono de búsqueda

ரோமர் 2

2
இறைவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு
1ஆகவே,#2:1 ஆகவே – அதாவது, “முன்னைய அதிகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில்” பிறருக்கு தீர்ப்பளிக்கும் மனிதனே, நீ உன்னை நியாயப்படுத்திக்கொள்ள வழியே இல்லை. தீர்ப்பளிக்கும்போது நீ அவர்களுக்கு எதிராகச் சுமத்துபவைகளை, நீயே தொடர்ந்து செய்துவருகின்றாய். எனவே நீ மற்றவர்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்போது, உனக்கு நீயே தண்டனைத்தீர்ப்பு வழங்குகிறாய். 2இவ்வாறு நடந்துகொள்வோர்க்கு எதிராக இறைவன் வழங்கும் நியாயத்தீர்ப்பானது, சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டது என்று நாங்கள் அறிந்திருக்கின்றோம். 3ஆகவே அவ்வாறான செயல்களைச் செய்துவருகின்றவர்களுக்கு தீர்ப்பளிக்கின்ற மனிதனே, அவற்றை நீயே செய்துவிட்டு இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்புவாய் என்று நினைக்கிறாயா? 4அல்லது, உன்னை மனந்திரும்புதலுக்கு#2:4 இதன் பொருள் பாவத்தைவிட்டு மனம் வருந்தி, மனந்திரும்பி, இறைவனிடம் திரும்புதல் வழிநடத்துவதே இறைவனுடைய தயவின் நோக்கம் என்பதை உணராமல், அவருடைய தயவு, சகிப்புத் தன்மை, பொறுமை ஆகியவற்றின் செழுமையை ஏளனம் செய்கின்றாயா?
5இறைவனின் நீதியான நியாயத்தீர்ப்பு வெளிப்படப் போகின்ற அந்த கோபத்தின் நாளிலே நீ அனுபவிக்கவிருக்கும் அவருடைய கோபத்தை, உன் பிடிவாதத்தினாலும் மனம் மாறாத இருதயத்தினாலும் இன்னும் அதிகமாய் சேர்த்துவைக்கின்றாய். 6இறைவன், “ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ற பலனைக் கொடுப்பார்.”#2:6 சங். 62:12; நீதி. 24:12 7சளைக்காமல் நல்ல செயல்கள் செய்து மகிமையையும், மரியாதையையும், அழியாமையையும் தேடுகின்றவர்களுக்கு#2:7 தேடுகின்றவர்களுக்கு அதாவது, இவைகளை இறைவனிடம் இருந்து தேடுகிறவர்களுக்கு இறைவன் நித்திய வாழ்வைக் கொடுப்பார். 8ஆனால் சுயநலக்காரருக்கும், சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல் அநீதிக்குக் கீழ்ப்படிகின்றவர்களுக்கும் சீற்றமும் கடுங் கோபமுமே கிடைக்கும். 9தீமை செய்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும்#2:9 ஒவ்வொரு மனிதருக்கும் – கிரேக்க மொழியில் ஒவ்வொரு மனித ஆத்துமாவுக்கும். இன்னலும் கொடுந்துன்பமும் கிடைக்கும். முதலில் யூதருக்கும் பின்பு யூதரல்லாத மக்களுக்கும் அது கிடைக்கும். 10ஆனால் நன்மை செய்கின்ற ஒவ்வொருவருக்கும் மகிமையும், மரியாதையும், சமாதானமும் காத்திருக்கும். அதுவும் முதலில் யூதருக்கும், பின்பு யூதரல்லாதோருக்கும் கிடைக்கும். 11ஏனென்றால், இறைவன் பக்கச்சார்பு உள்ளவர் அல்ல.
12நீதிச்சட்டத்தை#2:12 நீதிச்சட்டத்தை – இறைவன், மோசே ஊடாக யூத மக்களுக்குக் கொடுத்த சட்டங்கள். பெற்றுக்கொள்ளாமல் பாவம் செய்தவர்கள் அனைவரும், நீதிச்சட்டம் இல்லாமல் அழிவடைவார்கள். நீதிச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் பாவம் செய்தவர்கள் அனைவரும் அந்தச் சட்டத்தினாலேயே நியாயம் தீர்க்கப்படுவார்கள். 13ஏனெனில் நீதிச்சட்டத்தைக் கேட்கின்றவர்கள் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் அல்ல; மாறாக நீதிச்சட்டத்துக்குக் கீழ்ப்படிகின்றவர்களே நீதிமான்களாகத் தீர்க்கப்படுவார்கள். 14நீதிச்சட்டம் இல்லாத யூதரல்லாத மக்கள் இயல்பாகவே நீதிச்சட்டம் சொல்லுகின்றபடி செய்கின்றபோது, அவர்கள் தங்களுக்குத் தாங்களே நீதிச்சட்டமாக மாறுகின்றார்கள். 15நீதிச்சட்டத்தின் எதிர்பார்ப்புகள் தங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் தங்கள் நடத்தையில் வெளிப்படுத்துகின்றார்கள். அவர்களுடைய மனசாட்சி அதற்கு சாட்சி கொடுக்கின்றது. அத்துடன் அவர்களுடைய முரண்பட்ட சிந்தனைகளும், அவர்கள் குற்றம் உள்ளவர்களா குற்றம் அற்றவர்களா என்பதை சுட்டிக் காட்டும். 16மனிதர்களின் இரகசிய சிந்தனைகளை என்னுடைய நற்செய்தியின்படி இயேசு கிறிஸ்துவின் ஊடாக, இறைவன் நியாயம் தீர்க்கும் நாளில் இவ்வாறு சுட்டிக் காட்டப்படும்.
யூதர்களும் நீதிச்சட்டமும்
17இப்போது நீ உன்னை யூதன் என்று அழைத்துக்கொண்டு, நீதிச்சட்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து, இறைவனைக் குறித்து பெருமைப்பட்டுக் கொள்கின்றாய், 18நீதிச்சட்டத்தினால் நீ அறிவுறுத்தப்பட்டிருப்பதால், அவருடைய திட்டத்தை அறிந்து மேன்மையானது எது என ஆராய்ந்து ஏற்றுக்கொள்கின்றாய். 19அத்துடன், பார்வையற்றோருக்கு ஒரு வழிகாட்டி என்றும், இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சம் என்றும், 20நீதிச்சட்டத்தின் பரந்த அறிவையும் சத்தியத்தையும் பெற்றவன் என்றும், மூடர்களுக்கு அறிவைப் புகட்டுகின்றவன் என்றும், குழந்தைகளுக்கான ஆசிரியன் என்றும் உன்னை நீயே எண்ணிக்கொள்கிறாய். 21இத்தகைய மனநிலையோடு மற்றவர்களுக்குப் போதிக்கின்ற நீ, உனக்கு நீயே போதித்துக் கொள்வதில்லையா? களவு செய்யக் கூடாதென்று பிரசங்கிக்கின்ற நீ, களவு செய்கின்றாயா? 22தகாத உறவுகொள்ளக் கூடாதென்று சொல்லுகின்ற நீ, தகாத உறவுகொள்கின்றாயா? விக்கிரகங்களை அருவருக்கின்ற நீ, கோயில்களைக் கொள்ளையிடுகின்றாயா? 23நீதிச்சட்டத்தைக் குறித்து பெருமை பேசுகின்ற நீ, நீதிச்சட்டத்தை மீறுகின்றதனால் இறைவனை அவமதிக்கலாமா? 24அதனால் இறைவாக்கினனால் முன்னர்#2:24 இறைவாக்கினனால் முன்னர் – கிரேக்க மொழியில் எழுதியிருக்கின்றபடி என்ற சொல் மட்டுமே உள்ளது எழுதியிருக்கின்றபடி, “உங்கள் பொருட்டு யூதரல்லாத மக்களிடையே இறைவனுடைய பெயர் நிந்திக்கப்படுகின்றதே.”#2:24 ஏசா. 52:5; எசே. 36:20,22
25ஆகவே நீதிச்சட்டத்தை நீ கடைப்பிடித்தால் விருத்தசேதனம் பயனுள்ளதுதான். ஆனால், நீ நீதிச்சட்டத்தை மீறுகின்றபோது, விருத்தசேதனமற்றவன் போல் ஆகிவிடுகிறாய். 26மேலும், விருத்தசேதனமற்ற ஒருவர் நீதிச்சட்டத்தில் சொல்லப்பட்டவற்றைக் கடைப்பிடித்தால், அவருடைய விருத்தசேதனமின்மை விருத்தசேதனமாக எண்ணப்பட மாட்டாதோ? 27தன் உடலிலே விருத்தசேதனம் செய்துகொள்ளாதவனாயிருந்தும், நீதிச்சட்டத்துக்குக் கீழ்ப்படிகின்றவன், உன்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பான். ஏனெனில், எழுதப்பட்ட ஒழுங்குவிதியையும், விருத்தசேதனத்தையும் கொண்டிருந்தும், நீ நீதிச்சட்டத்தை மீறுகின்றவனாகி விட்டாயே!
28வெளித்தோற்றத்தில் மாத்திரம் ஒருவன் யூதனாயிருந்தால் அவன் யூதனல்லன்; வெறுமனே உடலிலும் வெளிப்புறத்திலும் செய்யப்படும் விருத்தசேதனமானது விருத்தசேதனமே அல்ல. 29ஒருவன் ஆழ்மனதில் யூதனாயிருந்தால், அவனே யூதன். எழுதப்பட்ட ஒழுங்குவிதியினால் அன்றி, பரிசுத்த ஆவியானவரால் இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம். இத்தகையவனுக்கு மனிதரிடமிருந்து அன்றி, இறைவனிடமிருந்தே புகழ்ச்சி வருகின்றது.

Actualmente seleccionado:

ரோமர் 2: TRV

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres tener guardados todos tus destacados en todos tus dispositivos? Regístrate o inicia sesión