மன்னிப்பளித்தல்
புதிய ஏற்பாட்டினைப் படியுங்கள்
இந்த திட்டம் ஒரு வருடத்தில் புதிய ஏற்பாட்டினை முழுமையாக படிக்க உங்களுக்கு வழிகாட்டும்.
நான் சரணடைகிறேன்: கைதிகளால் எழுதப்பட்ட ஊக்கமளிக்கும் திட்டம்
பைபிள் மீட்பு, சுதந்திரம் மற்றும் நம்பிக்கையின் புத்தகம். அதன் பக்கங்களுக்குள் ஆற்றல் மிக்க கதாபாத்திரங்கள் உள்ளன. உடைந்த ஆண்களும் பெண்களும் பதில்களைத் தேடுகிறார்கள். ஒருவகையில், அவர்கள் நீங்கள் படிக்கவிருக்கும் பக்திப்பாடல்களை எழுதிய தற்போதைய மற்றும் முன்னாள் கைதிகளைப் போன்றவர்கள். கம்பிகளுக்குப் பின்னால் உள்ள தேவாலயத்தின் குரல்களால் நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள் என்று நம்புகிறோம். அவர்களின் சாட்சி நம் அனைவரையும் விடுவிக்கட்டும்.
கிருபையின் கீதம்
இந்த கிருபையின் பக்தி கீதத்தின் மூலம் கடவுள் உங்கள் மீதான அன்பின் ஆழத்தைக் கண்டறியவும். சுவிசேஷகர் நிக் ஹால், உங்கள் மீது பாடப்பட்ட கடவுளின் கிருபையின் கீதத்தில் சேர உங்களை அழைக்கும் சக்திவாய்ந்த 5 நாள் பக்தி மூலம் உங்களுக்கு வழிகாட்டுவார்.
நம் மத்தியஸ்தராகிய இயேசுவை பின்பற்றுதல்
சாலை ஓரத்திலிருந்து நம்பிக்கையின்றி கதறும் கண்பார்வையற்ற பிச்சைக்காரன், அசிங்கம் என்று சொல்லி கலாச்சாரத்தால் துச்சமாக எண்ணப்படும் ஒழுக்கமற்ற பெண், அனைவராலும் வெறுக்கப்படும் ஊழல் பேர்வழியான அரசாங்க பணியாளர் -- சமுதாயத்தின் விளிம்புகளில் இருக்கும் இப்படிப்பட்ட மக்கள் ஒரு பரிசுத்தமான தேவனுடன் உறவுக்கொள்ள எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆப்பிரிக்க ஆராய்வு வேதாகமத்தில் லூக்கா புத்தகத்திலுள்ள கருத்துகளை சார்ந்த இந்த வாசிப்பு திட்டத்தில், தேவனுக்கும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் இயேசு பாலம் அமைப்பதை பின்தொடருங்கள்.
மன்னிப்பு
சில சமயங்களில் மன்னிப்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. மனுஷீகத்தில் மன்னிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவரின் உதவியோடு அது கூடும். மன்னிப்பின்மை நம் வாழ்வில் பல ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் வேதாகமத்தின் மூலம் மன்னிப்பைப் பற்றி ஆராய்வோம், கற்றுக்கொள்வோம்.
உண்மை ஆன்மீகம்
உண்மை கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கும்? வேதத்தின் ஆற்றலுள்ள பகுதியாகிய ரோமர் 12ஆம் அதிகாரம் நமக்கு ஒரு படத்தைக் கொடுக்கின்றது. இந்த வாசிப்புத் திட்டத்தில், நம் சிந்தனைகள், நம்மைப் பற்றிய நம் பார்வை, பிறருடன் உள்ள உறவுகள், தீமையுடனான போராட்டம் ஆகிய வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் கர்த்தர் மாற்றும் போது உண்மை ஆன்மீகத்தைப் பற்றி கற்றுக் கொள்வீர்கள். கர்த்தரிடமிருந்து சிறந்தவைகளைப் பெற்று உலகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.