YouVersion 标志
圣经计划视频
获取软件
选择语言
搜索图标

ஆதியாகமம் 1 的热门经文

1

ஆதியாகமம் 1:26-27

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

அதன்பின் இறைவன், “நமது உருவிலும் நமது சாயலின்படியும் மனிதனை உண்டாக்குவோம்; அவர்கள் கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், வளர்ப்பு மிருகங்களையும், எல்லா காட்டு மிருகங்களையும், தரையெங்கும் ஊரும் எல்லா உயிரினங்களையும் ஆளுகை செய்யட்டும்” என்று சொன்னார். அப்படியே இறைவன் தமது சாயலில் மனிதனைப் படைத்தார், இறைவனின் சாயலிலேயே அவர் அவர்களைப் படைத்தார். அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.

对照

探索 ஆதியாகமம் 1:26-27

2

ஆதியாகமம் 1:28

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

அதன்பின் இறைவன் அவர்களை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகி எண்ணிக்கையில் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள். கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களையும் ஆண்டு நடத்துங்கள்” எனக் கூறினார்.

对照

探索 ஆதியாகமம் 1:28

3

ஆதியாகமம் 1:1

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

ஆரம்பத்தில் இறைவன் வானங்களையும் பூமியையும் படைத்தார்.

对照

探索 ஆதியாகமம் 1:1

4

ஆதியாகமம் 1:2

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

பூமி உருவமற்று வெறுமையாய் இருந்தது. ஆழத்தின் மேற்பரப்பில் இருள் பரவியிருந்தது. இறைவனின் ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

对照

探索 ஆதியாகமம் 1:2

5

ஆதியாகமம் 1:3

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

அதன்பின் இறைவன், “ஒளி உண்டாகட்டும்” என்று சொன்னார்; ஒளி உண்டாயிற்று.

对照

探索 ஆதியாகமம் 1:3

6

ஆதியாகமம் 1:31

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

இறைவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார், அது மிக நன்றாயிருந்தது. அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஆறாம் நாள் ஆயிற்று.

对照

探索 ஆதியாகமம் 1:31

7

ஆதியாகமம் 1:4

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

ஒளி நல்லது என்று இறைவன் கண்டார், அவர் இருளிலிருந்து ஒளியைப் பிரித்தார்.

对照

探索 ஆதியாகமம் 1:4

8

ஆதியாகமம் 1:29

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

அதன்பின் இறைவன், “பூமி முழுவதும் மேற்பரப்பிலுள்ள விதை தரும் தாவரங்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் எல்லா மரங்களையும் உங்களுக்குக் கொடுக்கிறேன். அவை உங்களுக்கு உணவாயிருக்கும்.

对照

探索 ஆதியாகமம் 1:29

9

ஆதியாகமம் 1:5

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

இறைவன் ஒளிக்குப் “பகல்” என்றும் இருளுக்கு “இரவு” என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

对照

探索 ஆதியாகமம் 1:5

10

ஆதியாகமம் 1:6

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

அதன்பின் இறைவன், “தண்ணீர்திரளுக்கு இடையில் ஒரு வானவெளி உண்டாகட்டும்; அந்த வானவெளி கீழே இருக்கிற தண்ணீரிலிருந்து வானவெளிக்கு மேலே இருக்கிற தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்று சொன்னார்.

对照

探索 ஆதியாகமம் 1:6

11

ஆதியாகமம் 1:30

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

பூமியிலுள்ள எல்லா மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் நடமாடும் எல்லா உயிரினங்களுக்கும், அதாவது தன்னில் உயிர்மூச்சு உள்ள எல்லா உயிரினங்களுக்கும் நான் பச்சைத் தாவரங்கள் எல்லாவற்றையும் உணவாகக் கொடுக்கிறேன்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று.

对照

探索 ஆதியாகமம் 1:30

12

ஆதியாகமம் 1:14

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

அதன்பின் இறைவன், “வானவெளியில் ஒளிச்சுடர்கள் உண்டாகட்டும், அவை இரவிலிருந்து பகலைப் பிரிக்கட்டும்; அவை பூமியில் பருவகாலங்களையும், நாட்களையும், வருடங்களையும் குறிக்கும் அடையாளங்களாகவும்

对照

探索 ஆதியாகமம் 1:14

13

ஆதியாகமம் 1:11

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

அதன்பின் இறைவன், “நிலம் தாவர வகைகளை முளைப்பிக்கட்டும்: விதை தரும் பயிர்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் தன்தன் வகைகளின்படியே முளைப்பிக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று.

对照

探索 ஆதியாகமம் 1:11

14

ஆதியாகமம் 1:7

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

இவ்வாறு இறைவன் இந்த வானவெளியை உண்டாக்கி, கீழேயுள்ள தண்ணீரை, மேலேயுள்ள தண்ணீரிலிருந்து பிரித்தார். அது அப்படியே ஆயிற்று.

对照

探索 ஆதியாகமம் 1:7

15

ஆதியாகமம் 1:12

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

நிலம் தாவரங்களை முளைப்பித்தது: விதையை பிறப்பிக்கும் பயிர்களை அவற்றின் வகைகளின்படியும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களை அவற்றின் வகைகளின்படியும் முளைப்பித்தது. அது நல்லது என்று இறைவன் கண்டார்.

对照

探索 ஆதியாகமம் 1:12

16

ஆதியாகமம் 1:16

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

பகலை ஆளுவதற்குப் பெரிய சுடரும், இரவை ஆளுவதற்குச் சிறிய சுடருமாக, இறைவன் இரு பெரும் ஒளிச்சுடர்களை உண்டாக்கினார். அவர் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

对照

探索 ஆதியாகமம் 1:16

17

ஆதியாகமம் 1:9-10

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

அதன்பின் இறைவன், “ஆகாயத்தின் கீழுள்ள தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, உலர்ந்த தரை தோன்றட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் உலர்ந்த தரைக்கு “நிலம்” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “கடல்” என்றும் பெயரிட்டார். அது நல்லது என்று இறைவன் கண்டார்.

对照

探索 ஆதியாகமம் 1:9-10

18

ஆதியாகமம் 1:22

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

இறைவன் அவற்றை ஆசீர்வதித்து, “பலுகி எண்ணிக்கையில் பெருகி, கடல்நீரை நிரப்புங்கள், பூமியில் பறவைகளும் பெருகட்டும்” என்று சொன்னார்.

对照

探索 ஆதியாகமம் 1:22

19

ஆதியாகமம் 1:24

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

அதன்பின் இறைவன், “நிலம் உயிரினங்களை அவற்றின் வகைகளின்படி உண்டாக்கட்டும்: வளர்ப்பு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் அதினதின் வகையின்படி உண்டாக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று.

对照

探索 ஆதியாகமம் 1:24

20

ஆதியாகமம் 1:20

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

அதன்பின் இறைவன், “தண்ணீரில் நீந்தும் உயிரினங்கள் பெருகட்டும், பூமிக்கு மேலாக வானவெளியெங்கும் பறவைகள் பறக்கட்டும்” என்று சொன்னார்.

对照

探索 ஆதியாகமம் 1:20

21

ஆதியாகமம் 1:25

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

TCV

இறைவன் காட்டு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், வளர்ப்பு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், தரையில் ஊரும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அவற்றின் வகைகளின்படியும் உண்டாக்கினார். அது நல்லது என்று இறைவன் கண்டார்.

对照

探索 ஆதியாகமம் 1:25

上一章
下一章
YouVersion

我们要鼓励、挑战你每天亲近上帝。

事工

关于我们

就职机会

义工

博客

新闻区

有用链接

帮助

捐赠

圣经译本

音频圣经

译本语言

今日经文


此数字事工属于

Life.Church
English (US)

©2025 Life.Church / YouVersion

隐私政策使用条款
漏洞披露方案
FacebookTwitterInstagramYouTubePinterest

主页

圣经

计划

视频