Mufananidzo weYouVersion
Mucherechedzo Wekutsvaka

இயேசு – உலகத்தின் ஒளிChikamu

இயேசு – உலகத்தின் ஒளி

ZUVA 1 REMAZUVA 5

இருளில் ஒளிர்தல்

கிறிஸ்மஸ் பண்டிகையின் முந்தின நாளின் திருச்சபை இரவு ஆராதனையில் ஒருவர் மெழுகுவர்த்தி ஏற்ற அது பிரகாசமாய் ஒளிர்ந்தது. குழுவாய் இணைந்து கேரள் பாடல்கள் பாட, இயேசு பிறப்பின் கதையைக் கேட்டு, விளக்குகள் அணைக்கப்பட்டு திருச்சபையின் அறை இருளில் மூழ்கியது. பலிபீடத்தில் “சைலன்ட் நைட்” என்ற ஆங்கில பாடல் தொனிக்க, எரிந்துகொண்டிருந்து அந்த மெழுகுவர்த்தியிலிருந்து ஒளியானது அருகாமையில் நின்றிருந்த ஒவ்வொருவருடைய கையிலிருந்த மெழுகுவர்த்திகளுக்கு பரவியது. அந்த அறை முழுவதும் ஒளியால் நிரம்பியது.

இருளை அறுத்து ஒளியால் நிரப்பும் கிறிஸ்மஸ் பாரம்பரியத்தின் இந்த மெழுகுவர்த்தி ஆராதனையை பார்ப்பதிலே எனக்கு மிகுந்த பிரியம். இது கிறிஸ்மஸ் பண்டிகையின் முன்தினம் குழந்தை இயேசுவை இருளில் பிரகாசிப்பிக்கிற ஒளியாய் கருதுவதற்கான அடையாளம் (யோவான் 12:46). இயேசுவும் “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு” (வச. 46) தான் உலகத்திற்கு ஒளியாக வந்ததாக தன்னுடைய வருகையின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்.

இருள் சூழ்ந்த திருச்சபையில் அமர்ந்திருப்பதுபோல, மக்கள் தனிமையிலும், சோர்விலும், உபத்திரவத்திலும் திக்கற்றவர்களாகவும் இருளில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. எவரும் இருளிலே இருப்பதை விரும்பாத இயேசு மாம்சத்தில் உதித்தார் (1:9; 12:46). நம்மை இருளின் ஆதிக்கத்திலிருந்து காப்பற்ற அவர் நம்மோடு உறவு ஏற்படுத்திக்கொண்டு, நமக்கு ஒளியை கொடுத்தார். அதினால் நாம் சமாதானத்தையும் மகிழ்;ச்சியையும் பெற்றுக்கொண்டோம். அவருடைய ஒளியை நாம் பெற்றுக்கொண்ட மாத்திரத்தில், காயப்பட்டிருக்கும் உலகத்திற்கு அதை அறிமுகப்படுத்துவோம் (மத்தேயு 5:14).

இருளை துளைத்துகொண்டு வெளிவந்த ஒளியின் அனுபவத்தை நீங்கள் எப்போது உணர்ந்திருக்கிறீர்கள்? இயேசுவை அறிந்தது உங்கள் ஜீவியத்தை எவ்விதம் ஒளியூட்டியது?

இயேசுவே, எனக்குள் இருக்கும் உம்முடைய ஒளியை மற்றவர்கள் மீது பிரகாசிப்பிக்க எனக்கு உதவிசெய்யும்.

Zvinechekuita neHurongwa uhu

இயேசு – உலகத்தின் ஒளி

கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தம் நமக்குள்ள இருளை உணர்ந்து கொள்வதில் ஆரம்பிக்கிறது. அந்த இருளுக்கு ஒளியேற்றும் இயேசு கிறிஸ்துவின் ஒளியைக் கொண்டாடுகிறது. அவருடைய ஒளியின் பிரசன்னத்தில் நாம் ஒருநாள் விடுவிக்கப்படுவோம் என்பது நம்முடைய ஊக்கம் ஆகிறது, கிறிஸ்துவின் மேல் நம்பிக்கைகிறது. இந்த விடுமுறை காலத்தில் அந்த பிரகாசமான ஒளியின் மீது கவனம் செலுத்துவோம். நமது அனுதின மன்னா இந்த பத்து பிரதிபலிப்புகளால் இந்த கிறிஸ்துமஸில் உங்கள் வாழ்வில் இயேசு கிறிஸ்துவின் ஒளியேற்றும் வழிகளை திறக்கிறது .

More