Mufananidzo weYouVersion
Mucherechedzo Wekutsvaka

மாற்கு 2

2
ஏசு தளர்வாதக்காறன சுகமாடுது
(மத்தாயி 9:1–8; லூக்கா 5:17–26)
1கொறச்சுஜின களிஞட்டு, ஏசு கப்பர்நகூம் பாடாக ஹிந்திகும் ஹோதாங்; ஏசு அல்லி ஊரின இத்தீனெ ஹளி ஜனங்ஙளு அருதட்டு, 2ஆ ஊரின முந்தாக நில்லத்தெகூடி சல இல்லாத்த அளவிக ஜனங்ஙளு கூடிபந்தித்துரு; ஏசு ஆக்காக தெய்வ வஜனத உபதேச கீதண்டித்தாங். 3அம்மங்ங ஒந்து தளர்வாத தெண்ணகாறன நாக்கு ஆளு கூடி, ஹொத்தண்டு பந்துரு. 4எந்நங்ங ஆள்க்காறா தெரக்காயி இத்துதுகொண்டு, அவன ஏசின அரியெ கொண்டுஹோப்பத்தெ பற்றிபில்லெ; அதுகொண்டு ஆக்க ஆ மெனேமேலெ ஹத்தி, மேல்தட்டின பொளிச்சு தளர்வாத தெண்ணகாறன கெடெக்கெயோடெ ஒளெயெ எறக்கிரு. 5ஆக்க தன்னமேலெ பீத்திப்பா நம்பிக்கெத ஏசு கண்டட்டு, தளர்வாதக்காறனகூடெ, “மங்ஙா நீ கீதா தெற்று குற்றத ஒக்க ஷெமிச்சுஹடதெ” ஹளி ஹளிதாங். 6-7அம்மங்ங அல்லி குளுதித்தா செல வேதபண்டிதம்மாரு இது கேட்டட்டு, இவங் இந்த்தெ தெய்வத தூஷண ஹளுது ஏனாக? தெய்வதகொண்டல்லோ தெற்று குற்றாக மாப்பு கொடத்தெ பற்றுகொள்ளு? இவங் எந்த்தெ அந்த்தெஒக்க ஹளக்கெ ஹளி ஆக்கள மனசினாளெ பிஜாரிசிரு. 8எந்நங்ங ஏசு, தன்ன மனசினாளெ ஆக்கள பிஜார அருதட்டு, “நிங்க அந்த்தெ பிஜாருசுது ஏனாக? 9நா, தளர்வாதக்காறனகூடெ ‘நீ கீதா தெற்று குற்றத ஷெமிச்சுஹடதெ’ ஹளி ஹளுதோ, அல்ல ‘நின்ன கெடெக்கெ எத்திண்டு நெடது ஹோ’ ஹளி ஹளுதோ, ஏதாப்புது எளுப்புள்ளா காரெ? ஹளிவா! 10மனுஷனாயி பந்தா நனங்ங பூமியாளெ மனுஷம்மாரா தெற்று குற்றத ஷெமிப்பத்தெ அதிகார உட்டு ஹளிட்டுள்ளா காரெ நிங்க மனசிலுமாடுக்கு” ஹளி ஹளிதாங். 11எந்தட்டு, தளர்வாதக்காறனகூடெ, “நீ நின்ன கெடெக்கெத எத்திண்டு, நின்ன ஊரிக ஹோ” ஹளி ஹளிதாங். 12ஆகளே அவங், எல்லாரின முந்தாக எத்து, அவன கெடெக்கெத எத்திண்டு ஊரிக ஹோதாங்; எல்லாரும் ஆச்சரியபட்டட்டு, “இந்த்தெ ஒந்து அல்புத நங்க இதுவரெ கண்டுபில்லல்லோ” ஹளி, தெய்வத வாழ்த்திரு.
ஏசு லேவி ஹளாவன ஊளுது
(மத்தாயி 9:9–13; லூக்கா 5:27–32)
13கப்பர்நகூம் பாடந்த ஏசு ஹிந்திகும் கடலோரக ஹோதாங்; அம்மங்ங ஜனங்ஙளெல்லாரும் ஏசினப்படெ கூடிபந்துரு. ஆக்க எல்லாரிகும் ஏசு தெய்வ வஜன உபதேசகீதாங். 14அல்லிந்த கொறச்சுதூர ஹோப்பங்ங, அல்பேயி ஹளாவன மங்ங லேவி, ரோமாக்காறிக நிகுதி பிரிப்பா சலதாளெ குளுதிப்புது ஏசு கண்டட்டு, “நீ நன்னகூடெ பா” ஹளி ஊதாங்; அவனும் அல்லிந்த எத்து ஏசினகூடெ ஹோதாங். 15அதுகளிஞட்டு ஏசும், தன்ன சிஷ்யம்மாரும் லேவித ஊரின தீனிதிம்பத்தெ குளுதித்துரு; அல்லி ரோமாக்காறிக நிகுதி பிரிப்பா ஆள்க்காரும், தெற்று குற்ற கீதண்டித்தா பேறெ கொறே ஆள்க்காரும் பந்து, ஏசினகூடெ குளுது தீனிதிந்நண்டித்துரு. 16ஏசு நிகுதி பிரிப்பாக்களகூடெயும், தெற்று குற்ற கீவாக்களகூடெயும் தீனி திம்புதன, பரீசம்மாரா கூட்டதாளெ உள்ளா வேதபண்டிதம்மாரு செலாக்க கண்டட்டு, நிங்கள குரு நிகுதி பிரிப்பாக்களகூடெயும், தெற்று குற்ற கீவாக்களகூடெயும் குளுது தீனிதிம்புது ஏக்க? ஹளி சிஷ்யம்மாராகூடெ கேட்டுரு. 17ஏசு அது கேட்டட்டு, “தெண்ணகாறிக ஆப்புது வைத்துறின ஆவிசெ உள்ளுது; அல்லாதெ சுக உள்ளாவங்ங அல்ல; அதே ஹாற, உத்தமனாயிற்றெ ஜீவுசா ஆள்க்காறா அன்னேஷிண்டு பந்துதல்ல; தெற்று குற்ற கீவா ஆள்க்காறின ஒள்ளேக்களாயி மாற்றத்தெபேக்காயி ஆக்கள ஊளத்தெ ஆப்புது பந்துது நா” ஹளி ஹளிதாங்.
நோம்பின பற்றிட்டுள்ளா கேள்வி
(மத்தாயி 9:14–17; லூக்கா 5:33–39)
18யோவானின சிஷ்யம்மாரும் பரீசம்மாரும் நோம்பு எத்தி பந்துரு. ஒந்துஜின செலாக்க ஏசினப்படெ பந்தட்டு, “யோவானின சிஷ்யம்மாரும், பரீசம்மாரும் நோம்பு எத்தீரல்லோ? நின்ன சிஷ்யம்மாரு நோம்பு எத்தாத்துது ஏக்க?” ஹளி கேட்டுரு. 19அதங்ங ஏசு ஆக்களகூடெ, “மொதேகாற ஹைதனகூடெ இப்பா கூட்டுக்காரு நோம்பு எத்துறோ? மொதேகாறஹைதாங் ஆக்களகூடெ இப்பட்ட நோம்பு எத்தரு. 20எந்நங்ங, மொதேகாறஹைதாங் ஆக்களபுட்டு பிரிஞ்ஞு ஹோப்பா ஒந்து காலகட்ட பொக்கு; ஆ சமெயாளெ ஆக்க நோம்பு எத்துரு. 21கீறிதா ஹளேதுணி துன்னத்தெ பேக்காயி, ஹொசா துணிகஷ்ணத பீத்து ஒப்புரும் துன்னரு; அந்த்தெ துன்னிதுட்டிங்ஙி, ஹொசா துணி சுருங்ஙுகு; ஹளேதன ஒந்துகூடி கீருகு; ஓட்டெயும் தொடுதாக்கு. 22ஒப்புரும் ஹொசா முந்திரிச்சாறின ஹளே தோல்சஞ்சியாளெ ஹுயிது பீயரு; அந்த்தெ ஹுயிது பீத்தங்ங, ஹொசா முந்திரிச்சாறு ஹுளி ஆப்பங்ங ஹளே தோல்சஞ்சி பிரிவத்தெபற்றாதெ கீருகு; முந்திரிசாறும், சூசிண்டுஹோக்கு; அதுகொண்டு ஹொசா முந்திரிச்சாறின ஹொசா தோல்சஞ்சியாளெ தென்னெ ஹுயிது பீப்புரு” ஹளி ஹளிதாங்.
ஒழிவுஜினத பற்றி கேள்வி கேளுது
(மத்தாயி 12:1–8; லூக்கா 6:1–5)
23ஹிந்தெ, ஒந்து யூத ஒழிவுஜினதாளெ ஏசு பைலுகூடி நெடது ஹோப்பங்ங, கூடெ ஹோதா சிஷ்யம்மாரு, கோதம்பு கதுறின கூயிது, திரிம்பி திந்நண்டு ஹோதுரு. 24பரீசம்மாரு அது கண்டட்டு ஏசினகூடெ, “நோடெ, நின்ன சிஷ்யம்மாரு யூத நேமப்பிரகார ஒழிவுஜினதாளெ கீவத்தெ பாடில்லாத்த கெலசகீவுது?” ஹளி கேட்டுரு. 25அதங்ங ஏசு ஆக்களகூடெ, “தாவீதும் அவனகூடெ இத்தாக்களும், ஹொட்டெஹசியோடெ இத்தா சமெயாளெ ஏன கீதுரு ஹளி, தெய்வத புஸ்தகதாளெ நிங்க பாசிபில்லே? 26அபியத்தாரு ஹளாவாங் தொட்டபூஜாரியாயிற்றெ இத்தா காலதாளெ தாவீது தெய்வத கூடாரக ஹோயி, பூஜாரிமாரல்லாதெ பேறெ ஒப்புரும் திம்பத்தெபாடில்லாத்த, தெய்வாக காழ்ச்செ பீத்தா ஹிட்டின அவனும் திந்து, அவனகூடெ இத்தாக்காகும் கொட்டனல்லோ!” ஹளி ஹளிதாங். 27எந்தட்டு ஏசு ஆக்களகூடெ, “ஒழிவுஜின மனுஷங்ங பேக்காயி ஆப்புது தெய்வ உட்டுமாடிது. ஒழிவுஜினாக பேக்காயி மனுஷன உட்டுமாடிபில்லெ. 28அதுகொண்டு, ஒழிவுஜினதாளெ மனுஷம்மாரு ஏன கீயிக்கு ஹளி தீருமானிசத்துள்ளா அதிகார மனுஷனாயி பந்தா நனங்ங உட்டு” ஹளி ஹளிதாங்.

Zvasarudzwa nguva ino

மாற்கு 2: CMD

Sarudza vhesi

Sarudza zvinyorwa izvi

Yenzanisa

Pakurirana nevamwe

None

Unoda kuti zviratidziro zvako zvichengetedzwe pamidziyo yako yose? Nyoresa kana kuti pinda