لۆگۆی ئەپی پەرتووکی پیرۆز
ئایکۆنی گەڕان

சங் 115

115
சங்கீதம் 115
தாவீதின் பாடல்.
1எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,
உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.
2அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே
என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?
3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்;
தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.
4அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,
மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
5அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
6அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது;
அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
7அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது;
அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது;
தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
8அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,
அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
9இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு;
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
10ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்;
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
11யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,
யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
12யெகோவா நம்மை நினைத்திருக்கிறார்,
அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்,
அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.
13யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும்,
சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.
14யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.
15வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
16வானங்கள் யெகோவாவுடையவைகள்;
பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.
17இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும்
யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.
18நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும்
யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம்.
அல்லேலூயா.

دیاریکراوەکانی ئێستا:

சங் 115: IRVTam

بەرچاوکردن

لەبەرگرتنەوە

بەراوردکردن

هاوبەشی بکە

None

دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە