لۆگۆی ئەپی پەرتووکی پیرۆز
ئایکۆنی گەڕان

சங் 113

113
சங்கீதம் 113
1அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்;
யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.
2இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
3சூரியன் உதிக்கும் திசைதொடங்கி
அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
4யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்;
அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
5உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
6அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
7அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்;
ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
8அவனைப் பிரபுக்களோடும்,
தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
9மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி,
வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார்.
அல்லேலூயா.

دیاریکراوەکانی ئێستا:

சங் 113: IRVTam

بەرچاوکردن

لەبەرگرتنەوە

بەراوردکردن

هاوبەشی بکە

None

دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە