The Chosen - தமிழில் (பாகம் 3)নমুনা

இது உன் கதையின் முடிவல்ல...
உன் வாழ்க்கையில் நீ எப்போதாவது மிகவும் கடினமான நேரங்களை கடந்து வந்திருக்கிறாயா? நான் அப்படி ஒரு நேரத்தை கடந்து சென்றது என் கடந்த காலத்தில் வெகு தொலைவில் இல்லை.
எங்களிடம் பணம் இல்லாமல் போய்விட்டது, சாப்பிட எதுவும் இல்லை. என் மகளின் விலா எலும்புகளை என்னால் பார்க்க முடிந்தது, என் மனைவியின் கண்கள் உணவின்றி வாடின. எந்த வேலையும் எனக்குக் கிடைக்கவில்லை, என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. விரக்தியின் உச்ச கட்டத்தில், அந்த வழியாகச் செல்லும் முதல் நபரைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில், நகரத்திற்குள் செல்லும் சாலையில் ஒரு நண்பருடன் ஒளிந்து கொண்டேன்.
நாங்கள் ஒரு யூத மனிதனைபிடித்தோம்… நாங்கள் அவனை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் தப்பிக்கும் போராட்டத்தில் அவன் தலை ஒரு பாறையில் மோதியது. பின்பு ஒருவழியாக அவனுடைய குதிரையையும், உடைகளையும், உடைமைகளையும் எடுத்துக்கொண்டு சீக்கிரம் அங்கிருந்து கிளம்பிச் செல்ல விரைந்ததால் அவன் இறந்துவிட்டானா இல்லையா என்று பார்க்கமுடியவில்லை.
நாங்கள் அங்கிருந்து தப்பியோடும்போது, பதற்றத்தில் என் தவறான அசைவினால் குதிரையிலிருந்து விழுந்து என் கால் உடைந்தது. ஆண்டவரின் நீதியான தீர்ப்பின் விளைவாக என் வாழ்க்கையில் இவ்வாறு நடந்தது என்று நான் எப்போதும் கருதினேன். அன்றிலிருந்து, இப்படி ஒரு பயங்கரமான காரியத்தைச் செய்துவிட்டேனே என்ற வெட்கத்துடன் நான் வாழ்ந்துகொண்டிருந்தேன், அந்த யூத மனிதன் உயிர் பிழைத்தானா இல்லையா என்ற கேள்வி என்னை தினமும் வேதனைப்படுத்தியது. என்னால் இப்போது வேலை செய்யவோ, வயல்களில் விவசாயம் செய்யவோ முடியாது, அதனால் நானும் எனது குடும்பத்தினரும் பட்டினியால் இறந்துபோகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் ஒரு நாள், இயேசு வந்தார். அவருடைய சீடர்கள் எங்கள் வயல்களில் உழவு செய்து விதைத்திருந்தார்கள், இயேசு தாமே அவர்கள் வாங்கிய உணவுடன் எங்களை இரவு உணவிற்கு அழைத்தார். என்னால் நம்பவே முடியவில்லை: இப்படிப்பட்ட தயாள குணத்தை எங்களை அறியாத யாரும் எங்களிடம் காட்டியதில்லை.
அன்றிரவு, நான் என் இதயத்தைத் திறந்து, நான் செய்ததை ஒப்புக்கொண்டபோது, இயேசுவின் கண்களைக் கண்டபோது அவர் ஏற்கனவே என் கதையை அறிந்திருந்தார் என்பதை என்னால் காண முடிந்தது. பின்னர் அவர் நான் மிகவும் ஏங்கிக்கொண்டிருந்த கேள்விக்கான பதிலைக் கொடுத்தார்: "அவன் [நீங்கள் தாக்கிய யூதர்] இறக்கவில்லை. யாரோ ஒருவர் வந்து அவனுக்கு உதவினார். மெலேக், எனக்குத் தெரியும். நான் உனக்கு உறுதியளிக்கிறேன். அவன் மரிக்கவில்லை." இங்கே சந்தேகத்திற்கு இடமில்லை: இயேசு என்ன சொல்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். இந்த யூத மனிதன் நலமாக இருக்கிறான் என்பதை அறிந்த நான் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்து அழ ஆரம்பித்தேன்.
அப்படித்தான் எனது விடுதலை ஆரம்பித்தது, ஆனால் அது அங்கேயே நிற்கவில்லை. மறுநாள் காலையில், என் கால் முழுவதுமாக குணமடைந்த நிலையில் நான் எழுந்தேன் - இயேசு என்னைக் குணப்படுத்தினார்! இந்த வீட்டில் ஒருபோதும் இப்படிப்பட்ட நிஜமான மகிழ்ச்சியின் ஆரவாரம் இதுவரை இருந்ததில்லை. நான் இப்போது உள்ளேயும் வெளியேயும் ஒரு புதிய மனிதனாக இருக்கிறேன், அதற்கு அவர் மட்டுமே காரணம்.
என் பெயர் மெலேக், நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.
குறிப்பு: அன்பான நண்பரே, கடந்த காலத்தில் நீ எடுத்த பயங்கரமான தீர்மானங்களைப் பற்றி நீ வெட்கப்படலாம், ஒருவேளை உன் பாவங்கள் உன்னைத் துன்புறுத்துவது போல் உணரலாம். ஆனால் இயேசு உன்னை முழுமையாக மீட்டெடுக்க விரும்புகிறார். அவர் உன்னைப் பற்றி நினைத்தபோது வெட்கப்படவில்லை, மேலும் பல ஆண்டுகளாக நீ சுமந்து வரும் சுமைகள் அல்லது காயங்களிலிருந்து உன்னை விடுவிக்க விரும்புகிறார். இன்று உன் இருதயத்தைத் திறந்து கொடு, அவர் உன்னைக் குணப்படுத்தி மீட்டெடுக்கட்டும். ஆண்டவரின் சுதந்திரம் மற்றும் ஆசீர்வாதத்துடன் இந்த நாளை அனுபவி!
நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!
ধর্মগ্রন্থ
About this Plan

“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch
More
সম্পর্কিত পরিকল্পনাসমূহ

5 Days of 5-Minute Devotions for Teachers

Put Down Your Phone, Write Out a Psalm

Conversations

Thriving in God’s Family

Nearness

Here Am I: Send Me!

Retirement: The 3 Decisions Most People Miss for Lasting Success

God Gives Us Rain — a Sign of Abundance

Solo Parenting as a Widow
