திட்ட விவரம்

ஜீவனைப் பேசுதல்மாதிரி

Speaking Life

6 ல் 1 நாள்

நாவின் வல்லமை



ஜீவனும் மரணமும் நம் நாவின் வல்லமையால் பயன்படுத்தப்படுகின்றன! இதை நாம் நம்புகிறோமா? நாவு ஒரு சிறிய விஷயம் என்றாலும், அது பிரமாண்டமான உரைகளைச் உரைக்க முடியும்., நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!. கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.நம் உடலின் அனைத்து பாகங்களுக்கிடையில், நாவு மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் நாவும் நெருப்புத்தான், அதினால் உங்கள் உலகத்தை தீ வைத்து கொள்ளலாம் அல்லது சோர்வுற்ற ஆத்துமாவை உயிர்ப்பித்து கொள்ளலாம். நீங்கள் தேர்வு செய்யுங்கள்.



நம்முடைய வார்த்தைகள் எரியும் நெருப்பைப் போலவும், நெருங்கிய நண்பர்களைப் பிரிக்கவும், கோபத்தைத் தூண்டவும், முட்டாள்களுக்கு முட்டாள்தனத்தை அளிக்கவும் முடியும் என்று தேவ வார்த்தை சொல்கிறது. இதற்கு நேர்மாறாக, நம் நாவால் உயிரைக் கொடுக்கும் சொற்களைப் பேச முடியும் என்றும் சொல்லப்படுகிறது…ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம், மனுஷனுடைய வாய்மொழிகள் உயிர் கொடுக்கும் ஜலம்போலிருக்கும் அல்லது இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.நம்முடைய வார்த்தைகள் நல்லது அல்லது தீமைக்கான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.



நம் நாவும் சொற்களைப் பயன்படுத்துவதற்கான வல்லமையும் தேவனிடம் இருந்து வரும் ஒரு தனித்துவமான மற்றும் செல்வாக்குமிக்க பரிசு. நீதிமொழிகள் புத்தகத்தைப் படிக்கும்போது, ​​நம் சொற்களின் ஆற்றலைப் பற்றி அனேக வசனங்களில் கவனிக்க முடியும். நீதிமொழிகள் 12: 6 நம்முடைய வார்த்தைகளுக்கு அழிக்கும் சக்தியும், கட்டியெழுப்பும் சக்தியும் இருக்கிறது என்று போதிக்கிறது. மக்களை வளர்க்க அல்லது மற்றவர்களை அழிக்க நம் நாவிலிருந்து வரும் சொற்களைப் பயன்படுத்துகிறோமா? உங்கள் நாவுக்கு யார் பொறுப்பு? புண்படுத்தும் விஷயங்கள் நம் வாயிலிருந்து வெளியேறும்போது நாம் யாரைக் குறை கூற முடியும்? நம்முடைய சொந்த மொழிகளின் வெளியீட்டைக் கட்டுப்படுத்த நாம் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டியது அவசியம்.



நம்முடைய சக்திவாய்ந்த, நேர்மறை மற்றும் அழகான சொற்கள் குணமடையவும் மேம்படுத்தவும் முடியும் என்பதால், இந்த வார்த்தைகளை தாராளமாக உண்மையுடன் பேசும்போது, ​​நம் வார்த்தைகளுக்கு வாழ்க்கையை மாற்றும் திறன் உள்ளது. நீங்கள் எவ்வாறு உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்கள் வார்த்தைகள் மகத்துவத்தை அடைய மக்களை ஊக்குவிக்கிறதா? உங்கள் வார்த்தைகள் துன்பப்படுகிற ஒருவருக்கு ஆதரவளித்து உதவுகின்றனவா? உங்கள் வார்த்தைகளை உங்கள் சொந்த குழந்தைகளை வளர்த்துக் கொள்ள அல்லது ஊக்குவிக்க உதவுகிறதா.



துரதிர்ஷ்டவசமாக, வெறுப்பு, பயம், கோபம், சந்தேகம், விரக்தி மற்றும் மனக்கசப்பு போன்ற உணர்ச்சிகளை வார்த்தைகளாலும் வெளிப்படுத்தலாம் மற்றும் தூண்டலாம். சொற்கள் எழுதப்பட்டாலும் பேசப்பட்டாலும், ஆரோக்கியமான சூழல்களையும் உறவுகளையும் உடைத்து அழிக்க அவர்களுக்கு சக்தி உண்டு.



பல ஆண்டுகளுக்கு முன்பு, எபேசியர் 4: 29-ல் முன்வைக்கப்பட்ட சவாலை நான் ஏற்றுக்கொண்டேன், “கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். ” என்ன ஒரு வல்லமைமிக்க உத்தரவு. இது என் நாவை அடக்கும் ஒரு திட்டமாக இருக்கும். புண்படுத்தும் சொற்களின் தரிசான பாலைவனத்திற்கு சாட்சியாக, இந்த புதிய வாழ்க்கை கொடுக்கும் சாகசத்தை மேற்கொள்ள நான் உற்சாகமாக இருந்தேன். என் சொந்த நாவிலிருந்து தொடங்கி என் உலகிற்கு ஜீவனை பேச விரும்பினேன்.



நம்முடைய நாவு உயிருக்கு அல்லது மரணத்திற்கான வலிமைமிக்க வல்லமையாகப் பயன்படுத்துவதால், நாம் என்ன சொல்கிறோம், எப்படி சொல்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வார்த்தைகளைக் கவனியுங்கள். உங்கள் வார்த்தைகளால் எல்லாவற்றையும் மாற்ற முடியும்!



ஆழ்ந்து சிந்தியுங்கள்:



சிறியது. விரைவு. சுலபம். உங்கள் வார்த்தைகளின் தாக்கத்தைக் கவனியுங்கள். அழிக்கும் சொற்கள் அல்லாமல் உயிரைக் கொடுக்கும் உண்மைகளை நீங்கள் எவ்வாறு பேச முடியும்?


ஜெபம்:




ஆண்டவரே தயவுசெய்து என் நாவில் உள்ள சக்தி மற்றும் நான் தேர்ந்தெடுத்த சொற்களைப் பற்றி நன்கு அறிந்திருக்க எனக்கு உதவுங்கள். மரணம் அல்ல, ஜீவனைப் பேச எனக்கு உதவுங்கள்.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Speaking Life

வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள், சக்தி நிறைந்த வார்த்தைகள்! கட்டியெழுப்பும் வார்தைகள் அல்லது மனதை கிழிக்கும் வார்த்தைகள். உயிரைக் கொடுக்கும் வார்தைகள் அல்லது மரணத்தைக் கொண்டுவரும் வார்த்தைகள். தேர்வு நம்முடையது. நம...

More

இந்த திட்டத்தை வழங்கிய ரோக்ஸேன் பார்க்சுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.roxanneparks.com/home.html

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்